கேப்டன் விஜயகாந்த் இறப்பிற்கு கூட வரமால்“வெளிநாடுகளில்” புத்தாண்டு கொண்டாடிய நடிகர்கள் அனைவரும் வந்து சேர்ந்த பிறகும் வெறும் 700 பேர்தான் இருந்தார்கள் என்பது கலைஞர்100 நிகழ்ச்சி படுதோல்வி அடைந்துள்ளதை காட்டுகிறது.
மேலும் தமிழகம் வெள்ளத்தில் மிதந்த வேளையில் வெளியில் தலை காட்டாத சினிமா நடிகர்கள் கலைஞர் 100 விழாவில் கூடியிருப்பதும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் கலந்து கொள்ளாத சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக உள்ளது.
முதலில் இந்நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஜனவரி 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் முன்னிலை வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தனுஷ், சூர்யா, நயன்தாரா,கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், வடிவேலு, ரோஜா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் அனைவரும் எதிர்பார்ப்பும் விஜய் – அஜித் இருவரும் பங்கேற்பார்களா? என்பதில் தான் இருந்தது.
இதில் அஜித் எப்போதும் பொது நிகழ்ச்சியில் பெரிதும் கலந்து கொள்ளாதவர். கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகமே கலந்து கொண்டது. இதில் பேசிய அஜித், “இதுபோன்ற விழாவுக்கு தங்களை கட்டாயப்படுத்தி வரவைக்கிறார்கள்” என வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இது திமுகவினர் இடையே மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என சொல்லப்பட்டது போலவே அஜித் வரவேயில்லை.
அதேசமயம் விஜய், இதுபோன்ற ஆளும் கட்சி நிகழ்ச்சியில் எல்லாம் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் கலந்து கொள்வார். ஆனால் அவரே வராதது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் வருகையில் தீவிரம் காட்டும் விஜய், அதனை கருத்தில் கொண்டு வராமல் இருந்ததாக ஒரு பக்கம் இணையத்தில் தகவல் வெளியாகி வைரலானது. அதேசமயம் அவர் ஊரிலேயே இல்லை எனவும் கூறப்பட்டது. எது எப்படியோ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இல்லாமலேயே இந்த விழா முடிந்து விட்டது.
நடிகர் சங்கம் கடனை அடைத்த கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலி செலுத்த வராத நடிகர் நடிகைகளும் கலைஞர் நூற்றாண்டுக்கு ஒன்று கூடியிருப்பது எரிச்சலை கிளப்பியுள்ளது. நன்றி கெட்ட தமிழ்த்திரை உலகம் என நெட்டிசன்கள் பொங்க ஆரம்பித்துள்ளார்கள். மேலும் கேப்டன் திருமண மண்டபத்தை இடித்து விஜயகாந்தை மன உளைச்சலுக்கு காரணமாக இருந்தவர் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி
இந்த நிலையில் திமுக வின் கலைஞர் 100 ஆண்டு விழாவிற்க்கு சென்ற நடிகர்கள் கேப்டன் ஆன்மாவிற்க்கு செய்யும் துரேகம்..எனவும் கேப்டனுக்காக ஒன்றிணையாத தமிழ் திரையுலகம், நூற்றாண்டு விழாவுக்கு ஒன்று கூடுகிறது என்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல் எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது இருக்கைகள் காலியாக இருந்ததாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இப்படி கூட்டமே இல்லாமல் கலைஞர் 100 நிகழ்ச்சி நடக்க விஜய்- அஜித் தான் காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவரும் வருகை தந்திருந்தால் இந்நிகழ்ச்சி இப்படியே இருந்திருக்காது எனவும், கோலிவுட்டின் மாஸ் நடிகர்கள் யார் என்பது இப்போதாவது புரியட்டும் என சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளங்களை இரு நடிகர்களின் ரசிகர்களும் கருத்துகளால் நிரப்பி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















