போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் காவல் விசாரணை ஏன் நீடிக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷாருக்கான் மகன் ஆர்யான்கானின் மொபைல் போனிலிருந்து போதைப் பொருள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கண்டறியப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகத்தில் தலைவிரித்தாடுகிறது போதை பொருட்களை பழக்கம். மேலும் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களை வளராமல் தடுப்பதற்காக வளரும் நடிகர்களை காதல் வளையத்தில் விழ வைத்து போதை பொருட்களுக்கு அடிமையாக்கி வருகிறது ஒரு மாபியா கும்பல்.
மாபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பது கான்கள். பாலிவுட் திரையுலகம் எப்போதும் கான்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள்.இது மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணமும் இதே பாணியில் தான் நடந்துள்ளது. அவர் தோனி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அந்த வளர்ச்சி மாபியா கும்பல்களுக்கு பிடிக்கவில்லை. எனவே அவரின் காதலியை வைத்து போதைக்கு அடிமையாக்கி மன உளைச்சலுக்கு உட்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டார்கள் இந்த பாலிவுட் மாபியாக்கள். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் பல உண்மைகள் வெளிவர தொடங்கின.
இதனால் பாலிவுட் திரையுலகம் நடுங்கி போய் உள்ள நிலையில் பாலிவுட் உச்ச நடிகர் ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யான்கான் தனது ஆண்-பெண் நண்பர்களுக்கு மும்பை கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உல்லாச கப்பலில் போதை பார்ட்டி கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்தியதை கண்டு பிடித்துள்ளனர். பின் பார்ட்டியில் ஈடுபட்ட 8 பேரை தட்டி தூக்கினார்கள். இதில் 2 பெண்கள்
கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மும்பை நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரில் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் சேத் மெர்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் 3 பேரின் மீது சட்டப்பிரிவு 20, 27, 35, 8சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் கைபேசியில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் உள்ளது எனவே அவர்கள் மூவரையும் அக்டோபர் 11 ஆம் தேதி வரை அதாவது 9 நாட்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் காவலில் அடைக்க அனுமதி கேட்டார் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சார்பில் ஆஜரான ஏ.எஸ்.ஜி அனில் சிங்
வாதங்களை கேட்ட நீதிபதி ஷாருக்கான் மகனுக்கு ஆர்யான் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வரும் 7ஆம் தேதி வரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் காவல் விசாரணை ஏன் நீடிக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.ஷாருக்கான் மகன் ஆர்யான்கானின் கைப்பற்றப்பட்ட மொபைல் போனிலிருந்து போதைப் பொருள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கண்டறியப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததால் தொடர் விசாரணை அவசியம் என நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்
போதைப்பொருள் தயாரிப்பவர் குறித்து விசாரிக்கவில்லை எனில் அதன் சப்ளையர்கள் மற்றும் நிதி அளிப்பு அவர்களை கண்டறிவது கடினம் என்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கூறுகின்றனர் இதனை ஏற்ற நீதிபதி தொடர் விசாரணை நடத்தப்படுவது விசாரிப்பதற்கும் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு முக்கியமானது என குறிப்பிட்டு விசாரணை காவலை வரும் 7ம் தேதி வரை நீட்டித்து உள்ளார்.