மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் nta.ac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் நீட் தேர்வு நடக்குமா என்ற குழப்பத்தில் இடுந்த மாணவர்களுக்கு ஆனால் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிததார். இதனால் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என கூறி ஆட்சியினை பிடித்த திமுக தற்போது நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருங்கள் என கூறியுள்ளது
இன்னமும் மாணவர்களை குழப்பி படிக்கவிடாமல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் . கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் அது போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்துசெய்ய மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விகள் எழுப்பினார்கள் இந்த கேள்விக்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதற்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், “நீட் தேர்வு ரத்து செய்யப்படாது . NEET- (PG) & NEET- (UG) 2021 தேர்வுகள் முறையே 11 செப்டம்பர், 2021 மற்றும் 12 செப்டம்பர், 2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கென தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களுக்குப் பின்வரும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
1) – தேர்வு எழுதுவோர் கூட்டம் கூடுவதையும், தொலைதூரப் பயணத்தையும் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2) – தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படும் அட்மிஷன் கார்டுகள் அவர்கள் சுலபமாக நடமாடுவதற்கான இ-பாஸைக் கொண்டிருக்கும்.
3) – தேர்வு மையங்களுக்குள் நுழைவது வெளியேறுவது ஆகியவை நெரிசல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படும்.
4) – அனைத்து மாணவர்களுக்கும் வெப்பநிலையை சோதிக்கப்படும். சாதாரண வெப்பநிலைக்கு மேல் கண்டறியப்பட்டவர்கள், இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தனி தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.