சீனாவுடன் தொடர்புடைய 59 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஜூன் 15-ம்தேதி லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்திய இராணுவ வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தார்கள். சீன தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சீனாவிற்கு பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த இந்த நிலையில் சீனாவிற்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்து வருகிறது இந்தியா .
இந்தியாவில் நெடுஞ்சாலை பொதுப்பணி துறையில் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம் என பொதுப்பணித்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் கூட்டுத்திட்டமாக இருந்தாலும் நெடுஞ்சாலை பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதனை உறுதிப்படுத்தும் விதமாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) போன்ற பல்வேறு துறைகளில் சீன முதலீட்டாளர்களை இனி ஏற்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் என்றும் கடக்ரி கூறினார்.
மேலும் வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் என்றபோதும், சீன முதலீடு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. சுய சார்பு திட்டத்தின் கீழ், இந்தியாவில் இறக்குமதி செய்வது குறைக்கப்படும். சீனப் பொருட்களுக்கு ஆர்டர் செய்து இருக்கும் இந்திய நிறுவனங்கள் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பொருட்கள் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவும் விவசாயிகள் ஆர்டர் செய்து துறைமுகங்களில் நீண்ட நாட்கள் சிக்கி இருக்கும் பொருட்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் இருவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார்.