சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கத்தில் ஒன்று. இளம் தலைமுறையினர்க்கு சிக்னல் என்றால் கோபம் அதிகம். இருசக்கர வாகனங்கள் மஞ்சள் நிற சிக்னல் பார்த்தல் போதும் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சிக்னளை கடந்து செல்வார்கள். ட்ராபிக் காவலர்கள் இல்லை என்றால் சிக்னலுக்கு மதிப்பு இல்லை சாலை விதிகளை மீறுவதால் பல்வேறு விபத்துக்கள் நடக்கிறது. உயிர் பலியும் ஆகின்றது. விதிகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கூட ஒரு சில நபர்களை மட்டும் தான் தடுத்து நிறுத்த முடிகிறது. இதனை கருத்தில் கொண்டு சிக்னலில் நிற்காமல் பறந்து செல்லும் வாகனங்களை பிடிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளது சென்னை காவல்துறை
சென்னை சிக்னலில் பல வாகன ஓட்டிகள் முக்கியுமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் விதிமீறி நிற்காமல் செல்கிறார்கள். சிக்னல் போடுவதற்குள் பாதியளவு சிக்னலை கடந்துவிடுவது போன்ற பல விதிமீறல்கள் தினமும் நடந்துக்கொண்டே இருக்கிறது. விதி மீறும் அத்தனை வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து காவல்துறையால் பராதமும் விதிக்க முடிவதில்லை நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இதனை குறைக்கவும் சிக்னல் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய தொழில்நுட்பத்தை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சிக்னல்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை சிசிடிவி கேமராக்கள் மூலமாக அடையாளம் கண்டு, வாகன உரிமையாளர்களின் செல்போனுக்கு அபராத ரசீது அனுப்பப்படும் முறை துவங்கப்பட்டுள்ளது
சென்னையில் அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய 5 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம், சிக்னல்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் செல்போனுக்கு தானியங்கி மூலம் அபராதம் விதிக்கும் முறையை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிலால் இன்று துவங்கி வைத்தார். இதன்மூலம் இனி சிக்னலில் விதிமுறைகளை மீறி யாரும் தப்ப முடியாது. இந்த தொழில்நுட்பம் அனைத்து சிக்னலிலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.