பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு அயோத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி மட்டும் தான் நாட்டு மக்களுக்காக அதிக முறை உரையாற்றிய முதல் பிரதமர் ஆவார் .
இந்தியாவில் நீண்டாக காலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தையும், காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்டகாலம் காலம் பிரதமராக இருந்தவர்களில் முதலிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்கள் வரிசையில் முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு(6,130நாட்கள்), இந்திரா காந்தி(5,829நாட்கள்), மன்மோகன் சிங்(3,656) பதவியில் இருந்துள்ளார்கள்.
இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் அல்லாத கட்சியிலிருந்து நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் எனும் பெருமையையும் மோடி பெற்றுள்ளார். வாஜ்பாய் 2,268 நாட்கள் பிரதமராக இருந்தார். இப்ப அந்த சாதனையையும் மோடி முறியடித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பிரதமராக மோடி பொறுப்பேற்றார். ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 303 எம்.பி.க்களுடன் 2-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1996-ல் பிரதமராக பதவி ஏற்று மே 16 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 13 நாட்கள் பதவியில் இருந்தார். 2-வது முறையாக 1998-ல் பதவி ஏற்று 13 மாதங்கள் அதாவது 1998 மார்ச் முதல் 1999 ஏப்ரல் வரை வாஜ்பாய் பதவியில் இருந்தார். அதைத்தொடர்ந்து 1999ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று 2004-ம் ஆண்டுவரை 5 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
1996-ம் ஆண்டில் 13 நாட்கள் பிரதமராக இருந்த வாஜ்பாய் மே 27-ம் தேதி நாடாாளுமன்றத்தில், மிகச்சிறப்பான உரை நிகழ்த்தினார். அதன்பின் தேவேகவுடா ஜூன் 1-ம் தேதி புதிய பிரதமராக பதவி ஏற்கும் வரை காபந்து பிரதமராகவும் வாஜ்பாய் செயல்பட்டார்.
இதில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் காங்கிரஸ் கட்சியின் ஜவஹர்லால் நேரு கடந்த 1947 ஆகஸ்ட் 15 முதல் 1964, மே 27 வரை 6,130 நாட்கள் அதாவது 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரையிலும், பின்னர் 1980 ஜனவரி 14 முதல் 1984, அக்டோபர் 31 ம் தேதிவரையிலும் பிரதமராக 5,829 நாட்கள் பிரதமாராக இருந்தார்.பிறகு மன்மோகன் சிங் 2004 மே 22 முதல் 2014, மே 26 வரை 10 ஆண்டுகள் அதாவது 3,656 நாட்கள் பிரதமராக இருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களது ஆளுமைக்கு அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பார். காங்கிரசை போல பாரதிய ஜனதா கட்சிக்கும் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால், இந்தியா உலக அளவில் எல்லா வகையான அணுகுமுறையுளும் நம்பர் ஒன்றாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.