வீட்டில் அடைத்து வளர்க்க முடியாது..கண்டிப்பாக மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். முரட்டுத்தனம் அதிகம் இருக்கும். மூளை வளர்ச்சி ம்கூம். ஓணர் கிணற்றில் குதித்தால் பின்னாடியே. குதித்திடும்.
சில நூறு செம்மறி ஆடுகளை ஒரு சிலர் மட்டுமே ஓட்டிச்செல்வதை பார்க்க பாவமாக இருக்கும். முன்னாடி செல்லும் ஆடு எங்கே தலையை நீட்டுமோ பின்னாடி வரும் அத்தனையும் அதையே தொடரும்..
சாலையில் ஓட்டி செல்லும் போது வாகனம் ஏதும் வந்தால் இன்னும் கொடுமை.. 300 செம்மறி ஆடுகளை நல்ல திடகாத்திரமான நான்கு நபர்களால் பத்தி மேய்க்க முடியாது.. தாவு தீர்ந்திடும். நான்கு நபர்களாலேயே மேய்க்க முடியாது எனும் போது பாவம் வயதான ஒற்றை நபர் எப்படி செம்மறி ஆடுகளை மேய்க்க முடியும்..ஆனாலும் திறமையாக மேய்த்து செல்லும் ஒனர்களும் உண்டு…
இந்த செம்மறி ஆடுகள் தான் மேய்ப்பவர்களின் வாழ்வாதாரம்…ஆடு மேய்த்தால் ஊர் ஊராக தான் செல்லனும்..திருமணம் இறப்பு என எதுவும் நினைத்த நேரத்திற்க்கு ஊருக்கு போக முடியாது.கூலிக்கு ஆள் வைத்து தான் போகனும்…அவரும் நம்பிக்கையானவராக இருக்க வேண்டும்…
பட்டி போட்டால் தனியாக பணம் கிடைக்கும்…அதுவும் விவசாய நேரத்தில் ஆடுகளை கவனமாக மேய்ககனும்..களவாண்டு போக வாய்ப்பும் உண்டு…வளர்ந்த ஆடுகளை சரியான இடத்தில் விற்பனை செய்து பணம் கைக்கு வரும் போது தான் அது மேய்பபவர்களின் வெற்றியாகும்…
ஆடு மேய்ப்பவர் டைரி குறிப்பிலிருந்து…
இந்த பதிவிற்கும் திமுக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை