பாஜக மாநில தலைவர் வெற்றிகரமாக 150 தொகுதிகளில் என் மண் என் மக்கள் நடைபயணம் முடித்துள்ளார்.நேற்றைய தினம் தளி ஓசூர் கிருஷ்ணகிரி சட்டசபைத் தொகுதிகளில் மக்கள் பேராதரவுடன் பாதயாத்திரையை முடித்தார்.
இந்த நடைபயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது ;
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய், நுாறு நாள் வேலை திட்ட சம்பளம், மானியங்கள், முத்ரா கடன் உதவி என, அனைத்துத் திட்டங்களையும் பொது மக்கள் நேரடியாக பயன் பெறும் வகையில், வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டு, அதன்படி மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செயல்பட வழிவகை செய்திருக்கிறார் பிரதமர் மோடி.
இதனால், இடைத்தரகர்கள், ஊழல், லஞ்சம், கமிஷன் எதுவும் இல்லாமல் திட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் கோடி ரூபாய், இப்படி மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.ஆனால், தி.மு.க., அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு பணமான 1,000 ரூபாயை வாங்க வேண்டும் என்றால், தி.மு.க., கிளை செயலர் தயவை நாட வேண்டியுள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வாரவாரம் பாராட்டு விழா நடத்தியது தான், தமிழக அரசு தமிழ் மொழியை வளர்த்த முறை. கடந்த ஆண்டு, 55,000 குழந்தைகள் தமிழ் மொழித் தேர்வில் தோல்வியடைந்திருப்பது குறித்து சொன்னால், அதை காதில் வாங்க மாட்டார்கள்.அரசுக்கு மனமில்லை
ராகுலும், உதயநிதியும் வாரிசு அரசியலின் மிச்ச அடையாளங்கள். இருவரையும் என்ன தான் முன்னிலைப்படுத்தினாலும், அவர்களால் அரசியலில் உச்சபட்சமாக வர முடியாது.அதைத்தான் காங்கிரஸ் எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம், ‘பிரதமர் மோடியை வெல்ல ராகுலால் முடியாது’ என்று உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார். இதற்கு கட்சியில் இருந்து ‘நோட்டீஸ்’ அனுப்பியிருக்கின்றனர். என பேசிகாங்கிரசுக்கு செம்ம ட்விஸ்ட் கொடுத்துள்ளார் அண்ணாமலை. இது காங்கிரஸ் தரப்பில் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலை பேசினால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு , இந்த நிலையில் கார்த்திக் சிதம்பரம் பற்றி பேசியுள்ள அண்ணாமலையில் காங்கிரசுக்கும் திமுகவிற்கு பனிப்போர் நடந்துள்ளது. மேலும் தமிழக காங்கிரசார் கார்த்திக் சிதம்பரத்தை நீக்க வேண்டாம் சீண்ட வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம்.
கார்த்திக் சிதம்பரத்தை சீண்டினால் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியை சுற்றி செட்டியார் சமூக ஓட்டுகள் அப்படியே பாஜக பக்கம் போய்விடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை சுற்றியுள்ள பகுதிகளில் முக்குலத்தோர் மற்றும் செட்டியார் சமூக ஓட்டுகளே அதிகம். தற்போது முக்குலத்தோர் ஓட்டுக்கள் பாஜக பக்கம் சென்று கொண்டுள்ளது.
டிடிவி தினகரனுடன் பாஜக கூட்டணி பேசி வரும் நிலையில் சிவகங்கை தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்றால் கார்த்திக் சிதம்பரம் தேவை அதனால் அவரை சீண்டுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என திமுக தரப்பில் இருந்து காங்கிரசுக்கு உத்தரவு பறந்துள்ளதாம்.
மேலும் அவர் பேசுகையில் :
மாங்கனி மாவட்டம் என்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெயர் வருவதற்கு காரணமே ஊத்தங்கரை, மத்துார், போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில், 50,000 ஹெக்டரில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுவதால் தான். சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் பனை மர வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இவர்களின் முக்கிய வாழ்வாதாரமே பனை வெல்லம் தான். வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, பனை வெல்லம் கொள்முதல் செய்யப்படும் என்ற வாக்குறுதியை, இன்று வரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
கடந்த ஆண்டு ஜூலையில், பா.ஜ., சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையில், பனை மரம் ஏறுவது, கள் இறக்குவது போன்ற பனை சார்ந்த தொழில்களை, அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்; ஆனால், அரசுக்கு மனமில்லை.
செயல்படுத்தாத அறிக்கை
கடந்த 2009ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கு.ப.சிவசுப்பிரமணியம் குழுவின் அறிக்கை, ‘கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களை அனுமதிக்கும்போது, குறைந்த பாதிப்பு கொண்ட கள்ளை தடை செய்வதை நியாயப்படுத்த முடியாது’ எனக் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், தி.மு.க.,வினர் நடத்தும் சாராய ஆலைகள் வருமானத்துக்காக, இந்த அறிக்கையை அரசு ஏற்று செயல்படுத்தவில்லை. ஓசூர் – தர்மபுரி இடையே, தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 1,331 கோடி ரூபாய் உள்ளிட்ட, பல கோடி ரூபாய்க்கான மத்திய அரசு திட்டங்கள் கிருஷ்ணகிரியில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தல் , போச்சம்பள்ளி -சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்புத் தொழிற்சாலை போச்சம்பள்ளியில் கனிமப் பொருள் ஏற்றுமதி மையம், பூக்கள் ஏற்றுமதி மையம் போச்சம்பள்ளி -மருதேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் என கொடுத்த எந்த வாக்குறுதியையும், தி.மு.க., நிறைவேற்றவில்லை.
சட்டப் போராட்டம்
பஞ்சமி நிலத்தில் தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் அமைந்திருக்கிறது. அந்த நிலத்தை தலித் மக்களிடமே திருப்பி அளிக்கும் வரை, பா.ஜ.,வின் சட்டப் போராட்டம் ஓயாது.