25 ஆம் தேதி கொள்ளிடத்தில் துவங்குகிறது.
மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவில் சிவில் சட்டம் மட்டும் மதத்திற் கொன்றாக தனித்தனியாக இருப்பது குடிமக்களின் நன்மைக்கு எதிராக அமைந்துள்ளது.
இந்த நிலையை மாற்றி இந்தியாவில் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் உருவாக்கிட வேண்டுமென்பதே நடுநிலையாளர்கள் மற்றும் பெரும்பாண்மை மக்களின் நிலைப்பாடு ஆகும். உடனடியாக பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த இந்திய சட்ட ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியினரால் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் வருகிற 25.11.2020 புதன்கிழமை காலை 10 மணிக்கு கொள்ளிடம் அருள்மிகு புலீஸ்வரி அம்மன் ஆலயம் முன்பு இந்த கையெழுத்து இயக்கம் துவக்கப்பட உள்ளது. மாவட்டத் தலைவர் கருப்பு R. மணிகண்டன் தலைமையில் நடைபெறும் நிகழ்வினை மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.
S.சொக்கலிங்கம்,
மாவட்ட துணைத்தலைவர்.
97864 93115.
20.11.2020.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















