ராமநாதபுரத்தில் எனக்குதான் வெற்றி
பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர் மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்பார் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை,தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19-ந்தேதி முடிவடைந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். 10 ஆண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.என்றார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில் :
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மாநிலத்தில் வன்முறை, அட்டூழியங்கள், பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. தற்போது, போதைப்பொருள் அச்சுறுத்தல் பட்டியலில் தமிழ்நாடு சேர்க்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் ஏராளமாக மாநிலத்தில் நடைபெறுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் பள்ளக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தினர். சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வியாபாரி காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்தச் சம்பவங்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது. மாநிலத்தில் இளைஞர்கள் நலனில் திமுகவுக்கு உண்மையாக அக்கறை இருந்தால், மாநிலத்தில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான சமூகங்களை அமைக்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையில், “சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று டி.டி.வி தினகரன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், “போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















