ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பாரதப் பிரதமர் மோதி ஜிக்குத் தொலைபேசி போன் செய்து, நமஸ்தே மோதி ஜி, இந்த நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார். என்ன விஷயம் ஜி என்று மோதி ஜி கேட்டார்.
ஒரிஸாவிற்கு வர வேண்டிய கோவிட்19 டெஸ்ட் கிட்ஸ் ஏதோ போக்குவரத்து இடையூறால் வரத் தாமதமாகி தற்போது மும்பையில் உள்ளது. எனக்கு எமது மாநில மக்களின் மருத்துவப் பரிசோதனைக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. நீங்கள் நமது இராணுவ விமானத்தின் மூலம் மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு அனுப்பினால் நான் அங்கிருந்து வாகனங்களின் மூலமாக உரிய இடங்களுக்கு அனுப்ப முடியும் என்று சொன்னார்.
நீங்கள் கவலைப்பட வேண்டாம். கூடிய விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று மோதி ஜி சொல்ல, நவீன் பட்நாயக் அவர்களோ இன்று அதிகாலை 6 மணிக்குள் கிடைக்க உதவி செய்வீர்களா ? என்று கேட்டார்.
மோதி ஜி, இன்னும் ஆறு மணிநேரம் தானே கால அவகாசம் இருக்கிறது என்று கேட்க, நீங்கள் நினைத்தால் உங்களால் ஆவன செய்ய முடியும் என்று ஒரிஸா முதல்வர் வேண்ட, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாளைக் காலையில் சூரிய உதயத்தின் போது டெஸ்ட் கிட்ஸ் அங்கே இருக்கும் என்று சொன்னார் மோதிஜி.
நள்ளிரவு நேரத்தில் மோதிஜி அவர்களின் வழிகாட்டுதலின் படி பிரதமர் அலுவலகம் பேக்ஸ் மூலம் மூடப்பட்ட விமான நிலையங்களைத் திறக்க ஆணை பிறப்பித்தது , உரிய மாநில அதிகாரிகளுக்கு உடனுக்குடன் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இன்று காலை 6 மணிக்கு மும்பையில் வாகனங்களில் இருந்த டெஸ்ட் கிட்டுகள் மும்பையில் இருந்து இராணுவ விமானத்தில் மூலம் புவனேஸ்வருக்கு வந்தடைந்தது. புவனேஸ்வரில் விமான நிலையத்தில் உரிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
ஒரு மாநிலத்தின் முதல்வர் தன் மக்களுக்கு உதவ வேண்டும் என்று நள்ளிரவில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்க, தேசத் தலைவரோ விடிய விடிய ஆணை பிறப்பித்து உரிய நேரத்தில் உபகரணங்கள் சென்று சேர்ந்ததை உறுதி செய்யும் வரை விழித்திருந்து பணியாற்றினார்.
இதில் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆட்சி நடத்துவது நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளக் கட்சி. பாஜக ஆட்சி ஒரிஸாவில் நடைபெறவில்லை.
வேண்டுபவர் ஒரு மாநிலத்தின் முதல்வர். உதவி செய்ய வேண்டிய பொறுப்பு பிரதமரின் பணி. மக்கள் நலனே முக்கியம் என்று நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 6 மணி வரை விடிய விடிய தேசப் பணியாற்றிய பிரதமர் மோதி ஜிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுக்களும்.
அம்மா மீனாட்சித் தாயே பாரதப் பிரதமர் மோதி ஜிக்கு தீர்க்காயுளையும் நோய் நொடியற்ற நல் வாழ்க்கையையும் தா தாயே!
இப்படி 24 7 பாரதத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் உணவு உறக்கம் எதிர் பார்க்காமல் தேசப் பணியாற்றி வருகிறார் நம் பிரதமர்