நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடியின் உரை தான் ஹாட் டாபிக்.. பிரதமர் மோடி காங்கிரஸை இறங்கி அடித்தார். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தோல்வி முகமே கடு வருகிறது ராகுலுக்கு பின்னால் ஓடி கொண்டிருக்கிறது எனவும் வலுவே இல்லாத காங்கிரஸ் கட்சியுடன் சண்டை போட்டு போர் அடித்துவிட்டது இந்தியாவுக்கு ஒரு வலிமையான எதிர்க்கட்சி தேவை என பிரதமர் மோடி பேசியது ட்ரெண்டாகி உள்ளது.
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
10 ஆண்டுகளாக பா.ஜ.கவுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என ஆரம்பமே அதகளபடுத்தினார் மோடி. காங்கிரக்கு ஒரு சிறப்பு உண்டு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் . , மற்ற கட்சிகளையும் அது முன்னேற விடாது.இது தான் காங்கிரஸ் கட்சியின் சிறப்பாகும்.
கொஞ்சம் காங்கிரஸ்காரர்களின் முகத்தை பாருங்கள். அவர்கள் பாஜவை எதிர்த்து சண்டையிடும் பலத்தை இழந்துவிட்டார்கள். பாஜகவை மட்டுமல்ல தேர்தல்களில் நிற்க கூட அவர்களுக்கு துணிச்சல் இருப்பதாக தெரியவில்லை. இப்படி இருக்கும் காங்கிரஸுடன் எப்படி நாம் சண்டையிடுவது? இந்தியாவிற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவை என்கிற நிலைமை வந்துவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு இந்தியாவில் செய்துள்ள சாதனைகளை 100 ஆண்டுகள் ஆனாலும் கூட காங்கிரஸால் செய்ய முடியாது. அவ்வளவு ஏன்.. அதை அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இந்த 10 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு நாங்கள் வீடு கட்டி கொடுத்திருக்கிறோம். 80 லட்சம் பேருக்கு சிறிய வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். இது காங்கிரஸால் சாத்தியமே ஆகாது என்பது மக்களுக்கே தெரியும்.
காங்கிரஸ் இந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது? தொடர்ந்து தோற்றால் கூட ராகுல் காந்தி என்ற மனிதரை தொடர்ந்து பிரதமர் முகமாக காட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு பொருள் விற்பனை ஆகாது என்று தெரிந்திருந்தும் அதே பொருளை தான் தொடர்ந்து விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாததற்கு காரணமே காங்கிரஸ் கட்சி தான்.
காங்கிரஸ் கட்சிக்கு முடிவுகாலம் வந்துவிட்டது. காங்கிரஸின் மந்தமான ஊர்ந்து செல்லும் ஆட்சிக்கு உலகில் யாருமே போட்டி இல்லை. பாஜக ஆட்சியில் சுமார் 4 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் போன்ற ஆட்சி இருந்து இருந்தால் நாங்கள் செய்த சாதனைகளைச் செய்ய 3 தலைமுறைகள் ஆகியிருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.