ஒலிம்பிக்ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“டோக்கியோவில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது! நீரஜ் சோப்ரா இன்று மேற்கொண்டுள்ள சாதனை, என்றென்றும் நினைவுக்கூரப்படும். இளம் நீரஜ், மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் அவர் விளையாடினார். தங்கப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்.” என பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“டோக்கியோ 2020-ல் இருந்து மகிழ்ச்சிகரமான செய்தி! சிறப்பாக சண்டையிட்டீர்கள் பஜ்ரங் புனியா. ஒவ்வொரு இந்தியரையும் பெருமை மற்றும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ள உங்கள் சாதனைக்காக உங்களுக்கு வாழ்த்துகள்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version