கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள, தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் திருவிழா முடிந்து இரண்டாவது நாள் ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம் ,இந்நாளில் நாளை ஆற்று திருவிழா நடைபெற உள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றில் புல்கள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி கிடைக்கிறது. இதனை அகற்றக்கோரி பாஜகவினர் பொதுப்பணி துறை அதிகாரியிடம் கடந்த வாரம் மனு அளித்திருந்தனர்.
நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில், இதுவரை புதர்களை அகற்றாமல் இருந்ததால், விழுப்புரம் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன்,பாஜக மாவட்ட துணை தலைவர் வசந்தன், திருக்கோவிலூர் பாஜக நகர தலைவர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட பா.ஜ.க வினர் களத்தில் இறங்கி தென்பெண்ணை ஆற்றில் இருந்த புதர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர்.மேலும் பாஜகவினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















