தேவாலய பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் தெரிவித்துள்ளார். பிராங்கோ மூலக்கல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப்பாக இருந்த சமயத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் இவர் மீது அங்கு சேவை செய்து வந்த கன்னியாஸ்திரி பபுகார் அளித்தார். அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . கன்னியாஸ்திரி அளித்த புகாரில் 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பலமுறை தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டார் என கன்னியாஸ்திரி பிஷப் பிராங்கோ மீது புகார் அளித்திருக்கிறார்.
ஆனால் தேவாலய நிர்வாகமோ பிஷப் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த புகார் அளித்த கன்னியாஸ்திரி மேல் நடவடிக்கை எடுத்தது. பின்னர் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி பல போராட்டங்களை நடத்தியதன் காரணமாக அந்த காமவெறி பிஷப் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் பிஷப் பிராங்கோ மூலக்கல் மீது மற்றொரு கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் குருவிழங்கோடு தேவாலயத்தை சேர்த்து மற்றொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு பிஷப் பிராங்கோ மமூலக்கல் மீது புதிய புகார் ஒன்றை அங்குள்ள காவல் நிலையத்தில் அளித்து உள்ளார். அவர் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:- 2015 -ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பிஷாப் பிரான்கோ முலக்கல், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
அவர் பலமுறை என்னிடம் கீழ்த்தரமாக நடந்து உள்ளார். எனது விருப்பத்திற்கு மாறாக என்னை கட்டி பிடித்து முத்தமிட்டார். அவர் தொடக்கூடதாத இடங்களில் தொட்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கற்பழிப்பு பிஷாப் பிரான்கோ முலக்கல் மீது புதிதாக மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் தொல்லை புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















