தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இளைஞர்கள் அடிமையாகி வருகின்றார்கள். தற்போது இளைஞர்கள் மட்டுமின்றி மாணவர்களும் ஆன்லைன் சூதாட்டத்தில் கவனம் செலுத்துவதாக வந்த தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கின்றது.
மேலும் தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக காசை இழந்து இதுவரை பத்துக்கு மேற்பட்டோர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு உள்ளனர். இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி உட்பட பல்வேறு தரப்பினர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது” என ட்வீட் செய்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் (Online Gambling) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.இந்தநிலையில், உயிரையும் பறிக்கும் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி என அறிவித்திருப்பது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















