சூடானில் இருந்து இதுவரை 4000 இந்தியர்கள் மீட்கப்பட்டுவிட்டதாகவும், ஆப்பரேசன் காவிரி நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில், இதுவரை 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 2,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் மோதல் நடந்து வரும் சூடானில் வசிக்கும் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களை பத்திரமாக மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து ஆப்பரேசன் காவிரி என்ற திட்டத்தின் மூலம், கடற்படை கப்பல், போர் விமானங்கள் வாயிலாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வந்தனர். இன்று வெளியான தகவலில் சூடானிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 862 இந்தியர்கள் மீட்கப்ட்டுவிட்டனர். ஆப்பரேசன் காவிரி நிறைவு பெற்றது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின் போது பெல்லாரியில் பிரதமர் மோடி பேசியது, சூடானில் சிக்கியுள்ள மற்ற நாட்டவர்களை அந்நாடு மீட்டதாக தெரியவில்லை. ஆனால் என் நாட்டு மக்கள் வேதனையில் இருப்பதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களை காப்பாற்ற என்னால் எந்த அளவிற்கும் முடியுமோ அந்த அளவிற்கு செல்ல முடியும். ஈராக்கில் சிக்கிய இந்திய நர்ஸ்களை மீட்டது பா.ஜ. அரசு. விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தன் பாக்.ராணுவத்திடம் சிக்கிய போது அவர் பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.