கடந்த சனிக்கிழமை அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இதற்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் இதை அரசியலாக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழகத்தில் இந்த விஷயத்தை பெரும் சர்ச்சையாகி வருகின்றார்கள்.
ஜெய் ஸ்ரீராம் குறித்து அரசியலாக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்குபாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தான் தற்போது உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. அந்தப் போட்டியின் போதுத இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இதுற்கு எதிர்ப்பு தெரிவித்தார் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ஐயோ! பொது வெளியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிடுகிறார்களே என்று பதை பதைத்து போகின்றனர் மத சார்பற்ற நல்லவர்கள் சிலர். சரி.. இனிமேல், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பொதுவெளியில் தங்கள் கடவுள்கள் குறித்து எந்த கோஷங்களையோ, வழிபாடுகளையோ, பிரச்சாரங்களையோ செய்யக்கூடாது என்று சொல்ல துணிச்சல் உங்களுக்கு உள்ளதா? எந்த மதத்தையும் நாம் இழிவுபடுத்தவோ அல்லது எந்த மத சுதந்திரத்தையும் தடுக்கவோ கூடாது, அது முடியவும் முடியாது. அது தான் மத சார்பற்ற தன்மை
மாற்று மதத்தினரை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லக்கூடாது என்றால், இனி ஹிந்துக்களின் எதிரில் நின்று யாரும் ‘அல்லாஹு அக்பர்’ என்றோ, ‘இயேசு அழைக்கிறார்’ என்றோ சொல்லக்கூடாது என்று கோரிக்கை விடுப்பார்களா இவர்கள்?
அல்லாஹூ அக்பர் என்றும், இயேசு கிறிஸ்து என்றும் சொல்வது அவரவர் உரிமை என்றால் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதும் அவரவரின் உரிமையே. இதில் தலையிட யாருக்கும் உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















