வருமானவரி பாக்கித்தொகைக்கு வட்டி செலுத்த உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சினிமாவில் மட்டும் வசனம் பேசி நல்லவர்களாக நடித்தால் போதாது .நிஜத்திலும் நல்லவனாக இருக்க முயற்சி செய்யுங்கள் 60 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்கள் வரி செலுத்தாமல் இழுத்தடிப்பது எந்த விதத்தில் நியாயம்,. சொகுசு கார் சொகுசு வாழ்க்கை என வாழ்ந்து வரும் நடிகர்கள் வரி செலுத்தாமல் இருந்தால் வசதி இல்லாத மக்களுக்கு அரசு எப்படி நல்லது செய்ய முடியும்.
இந்த லட்சணத்தில் அரசாங்கம் மருத்துவம் கல்வி இதையெல்லாம் சிங்கப்பூர் மாதிரி இலவசமாக கொடுக்க வேண்டும் என்று சினிமாவில் வசனம் பேசுகிறீர்கள்.சிங்கப்பூரில் உங்களை மாதிரி வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்ற நினைத்தால் எப்படி இலவச மருத்துவம் இலவச கல்வி தரமுடியும்?
விஜய் தனுஷை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா வரி செலுத்தாமல் அரசுக்கு டிமிக்கி கொடுத்துள்ளார். கருத்து செல்வதில் நடிகர் சூர்யா குடும்பத்தினை அடித்து கொள்வதற்கு ஆட்கள் இல்லை.
ஜோதிகா கோவில்களுக்கு செலவு செய்யாதீர்கள் மருத்துவமனைக்கு செலவு செய்யுங்கள், இவர் தம்பி கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவு என நடிப்பவர். இவரின் அப்பா சிவக்குமார் அன்பாக போட்டோ எடுக்க வந்தால் அடித்து விரட்டுபவர். இதுதாங்க இந்த சூர்யா குடும்பம்.
சினிமாவில் ஒரு ரூபாய்க்கு விமான டிக்கட் விற்பதாக சூளுரைத்து சூரரை போற்றவைத்த சூர்யா தான் நிஜத்தில் வருமானவரி செலுத்தாமல் அரசினை ஏமாற்றியுள்ளார்.
பிதாமகன் படத்தில் மக்களை ஏமாற்றி பணத்தினை பிடுங்கும் கேரக்டரில் நடித்திருப்பார். இதுதான் அவரின் உண்மை முகம்,
நடிகர் சூர்யா கட்ட வேண்டிய வருமானவரிக்கு 1 சதவீதம் வட்டிபோட்டு வசூலிக்க வருமானவரித்துறை முயற்சித்த நிலையில், அந்த வட்டியில் இருந்து விலக்கு கேட்டு அவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
12 வருடங்களுக்கு முன் வருமான வரி செலுத்தாமல் இருந்த சூர்யா வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் வரி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார் சூர்யா. இது குறித்து வழக்கு நடந்த வேளையில் அந்த தொகையினை உடனடியாக செலுத்த கூறி 2011 ம் ஆண்டு வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரி ஏமாற்றிய தொகைக்கு மாதம் 1 சதவீதம் வட்டி வீதம் செலுத்த ஆணையிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு சோதனை நடத்தினார்கள் 2011 ஆம் தீர்ப்பு வந்தது,.
3 ஆண்டுகள் தாமதமாக முடிவு செய்ததால், வருமான வரி மீதான வட்டி வசூலிப்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் வைத்திருந்தார்.
வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் இந்த கால தாமதம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய வருமானவரித்துறை, அவருக்கு வருமானவரியின் வட்டியில் விலக்கு பெற உரிமையில்லை என்ற வாதத்தை முன்வைத்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்று, வருமானவரி மீதான வட்டி வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு கேட்ட சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் வருமானவரித்துறை கணக்கிட்டு தெரிவித்த மறுமதிப்பீட்டு தொகையை கட்டாமல் 10 வருடங்களாக இழுத்தடித்த சூர்யாவிடம் இருந்து, அந்த 3 வருடங்களுக்கு மாதம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 960 வீதம் வட்டி கணக்கிடப்பட்டு மொத்தமாக சுமார் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் சூர்யா தரப்பில், தாங்கள் வருமானவரியை வட்டியுடன் செலுத்தி விட்டதாகவும், வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டதில் இருந்து மட்டுமே விலக்கு கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே #வரிகட்றா_சூரியா என்ற ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்தார்கள். தனுஷ் விஜய் ரசிகர்கள்,