அசாதுதீன் உவைசிக்கு ஆரம்பமே வெற்றி ….

இதயங்களை இணைப்போம் என்கிற பெயரில் சென்னையில் வருகின்ற 6 ம்தேதி திமுகவின் சிறுபான்மை அணி சார்பில் நடத்த இருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அசாதுதீன் உவைசிக்கு அழைப்பு கொடுக்கபட்டுள்ளது. அவரும் கலந்து கொள்வார் என்று செய்திகள் தெரிவித்து இருந்தன.
.
ஆனால் இந்த அறிவிப்பு வெளி வந்த சில மணி நேரங்களிலேயே திமுக உவைசியை அழைக்க வில்லை என்று சில மீடியாக்கள் மூலமாக தெரிவித்து இருக்கிற து.இதில் எது உண்மை? அசாதுதீன் உ வைசி சென்னை வருவாரா? திமுக மாநாட்டில் கலந்து கொள்வாரா? என்று ஸ்டாலின் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏனெனில் ஹைதராபாத்தில் உள்ள அசாதுதீன் இல்லத்தில் அவரை சந்தித்து திமுகவின் சிறுபான்மை அணி தலைவர் மஸ்தான் அவர்கள் அழைப்பிதழ் அளித்த காட்சிகள் ஏற்கனவே வெளி வந்துள்ள நிலையில் இப்பொழுது திமுக அவரை
அழைக்க வில்லை என்று கூறினால் படுகேவலமாகி விடும்.

ஒரு வேளை அசாதுதீன் உவைசி திமுக மாநாட்டில் கலந்து கொண்டாலும் அது நிச்சயமாக தேர்தல் கூட்டணியாக மாறமுடியாது. ஏனென்றால் அசாதுதீன் உவைசி கேட்கும் தொகுதிகளை திமுகவினால் நிச்சயமாக அளிக்க முடியாது.

தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளு க்கு 1 சீட் இல்லை 2 சீட் கொடுத்தாலே போதும் வாழ்க ஸ்டாலின் வளர்க திமுக
என்று கிடைப்பதை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் உவைசியோ 20 தொகுதிகளை கேட்பார். அதை நிச்சயமாக திமுகவினால் அளிக்க முடியாது.

ஏனென்றால் தமிழகத்தில் சுமார் 7 சதவீதம் உள்ள முஸ்லிம்கள் ராமநாதபுரம் வேலூர் மாவட்டங்களை தவிர வேறு எங்கும் தேர்தலில வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியை உடையவர்கள் அல்ல.

இதனால் திமுக அந்த மாவட்டங்களில் 1 அல்லது 2 தொகுதிகளை திமுகவின் கூட்டணி கட்சிகளாக இருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு திமுக அளித்து விடுவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் அசாதுதீன் உவைசி கேட்கும் 20 தொகுதிகளை திமுகவினால் எப்படி அளிக்க முடியும்?

நிச்சயமாக முடியாது .அது மட்டுமல்லாமல் திமுகவுடன் காலம் காலமாக இருக்கு ம் முஸ்லிம் கட்சிகளுக்கு தொகுதி அளிக்
காமல் எப்படி அசாதுதீன் உவைசி கேட்கு ம் தொகுதிகளை திமுகவினால் அளிக்க
முடியும்?

இது தாங்க அசாதுதீன் உவைசியின் டெக்னிக். மகாராஷ்டிரா பீகார் என்று அவர் கால் வைத்த மாநிலங்களில் ஆர ம்பத்தில் செக்யூலர் என்று கூறிக்கொ ண்டு இருக்கும் கட்சிகளிடம் கூட்டணி குறித்து பேசுவார்.அவர்களும் ஆஹா சிக்கிவிட்டார் பாய் என்று அவருக்கு ராஜ மரியாதை அளிப்பார்கள்.

கடைசியில் அவர் கேட்கும் தொகுதியில் இருந்து இறங்கி வராத அவருடைய செயலினால் கடுப்படையும் கட்சிகள் அவரை திட்டி கூட்டணியும் வேண்டாம் ஒரு மண் ணும் வேண்டாம் என்று அவரை அனுப்பிவிடுவார்கள்.

இது தாங்க அசாதுதீன் உவைசியின் ஸ்பெசல்.நான் கூட்டணிக்காக தயாராக இருந்தேன். ஆனால் அவர்கள் தான் என்னை தீண்டத்தகாதவர்கள் மாதிரி துரத்திவிட்டார்கள் என்பார். இதனால் என்ன வாகும? முஸ்லிம்களின் மன நிலை மாறும்.

அசாதுதீன் உவைசி கூட்டணிக்கு தயா ராக இருந்தும் அவரை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று முஸ்லிம்களிடையே கோபம் ஏற்படும்.இதனால் தேர்தல் பிரச்சாரங்களில் அவர் வைக்கும் முஸ்லிம் வாக்குகளை நான் பிரிக்கிறேனா என்ற தன்னிலை விளக்கமும் முஸ்லிம்களால் ஏற்கப்பட்டு அவருக்கு வாக்கு அளித்து விடுவார்கள்.

தமிழகத்திலும் அசாதுதீன் உவைசி ஆர ம்பத்திலேயே வெற்றி பெற்று விட்டார் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் திமுக அழைத்த மாநாட்டிற்கு அவர் வர ஒத்து கொண்டு இருக்கிறார்.அதனால் செக்யூலர் கட்சிகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக ஆரம்பத்திலேயே தமிழக முஸ்லிம்களுக்கு உணர்த்தி விட்டார்.

இனி திமுக அசாதுதீன் உவைசியை வரவேண்டாம் என்று கூறினால் என்னை அழைத்து அவமானப்படுத்தி விட்டது திமுக என்று பிரச்சாரம் செய்வார். அவ ரை நிச்சயமாக திமுக கூட்டணிக்கு கொண்டு வர முடியாது. வரவும் மாட்டார்.ஆ னானப்பட்ட சரத்பவாரினாலே முடியவில்லை ஸ்டாலினால் முடியுமா?

இப்பொழுது திமுக பாடு தான் சிக்கலாகி விட்டது.ஆர்வ கோளாறினால் அசாதுதீன் உவைசியை அழைக்க அவரும் நல்ல பிள்ளையாக வருகிறேன் என்று கூற இப்பொழுது இங்குள்ள முஸ்லிம் கட்சிகளின் எதிர்ப்பினால் அவரை வர வேண்டாம் என்று திமுக அறிவித்து உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆக அசாதுதீன் உவைசி தமிழகத்தில் கால் வைக்கும் முன்பே அவர் நியாய த்தை எடுத்து வைக்க களம் அமைத்துக்
கொடுத்து விட்டது திமுக. ஒரு வேளை அசாதுதீன் உவைசி திமுக மாநாட்டிற்கு வந்தாலும் திமுக கூட்டணியில் இணையவே முடியாது.

தேர்தல் மேடைகளில் அசாதுதீன் உவைசி திமுக மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் நிச்சயமாக முஸ்லிம்கள் மத்தியில் எதிரொலிக்கும்.. என்னை பொறுத்த வரை ஸ்டாலின் அசாதுதீன் உவைசியை அழைத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டார் .

Exit mobile version