அமெரிக்கா வெளியே! இந்தியா உள்ளே! ஆப்கானிஸ்தானில் தலிபான்களை தட்டி தூக்குமா இந்தியா?

அமெரிக்கா வெளியே! இந்தியா உள்ளே! ஆப்கானிஸ்தானில் தலிபான்களை தட்டி தூக்குமா இந்தியா?

தலிபான்களை தட்டி தூக்குமா இந்தியா? ஊர் வம்பையெல்லாம் விலை கொடுத்து வாங்கும் அமெரிக்கா இப்பொழுது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் சேட்டையை கண்டு கொள்ளாமல் அமை தியாக ஒதுங்கி இருப்பது ...

பாஜக தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட் அணில்கள் விளையாடியதா அண்ணாமலை செய்த தரமான சம்பவம்.

பாஜக தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட் அணில்கள் விளையாடியதா அண்ணாமலை செய்த தரமான சம்பவம்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்திகள் இடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. புதிய வேளாண் சட்டம் குறித்து ...

விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றும் ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டத்தை துவங்கியது பிரதமர் மோடி அரசு.

விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றும் ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டத்தை துவங்கியது பிரதமர் மோடி அரசு.

இந்தியாவின் மொத்த காய்கறி (பாமாயில்) எண்ணெய் இறக்குமதியில் 60% பங்களிப்பு செய்யும் பாம் எண்ணெயில் ஆத்மநிர்பார்த்தாவை அடைய தெளிவான அழைப்பை விடுத்த பிரதமர் மோடி, தேசிய சமையல் ...

மோடி ஆட்சியில் நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு.

மோடி ஆட்சியில் நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு.

நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரித்துள்ளது என   மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி  கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த  பதிலில் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 16.62 கோடியாக இருந்த எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 29.11 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் விவரம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இணைந்த எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு,  எரிவாயு மானியம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 29.11 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்களில், 27.7 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தில் இணைந்துள்ளனர். மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக இவர்களின் விவரம் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.   எல்பிஜி மானியம், தானியங்கி முறையில்  வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.  இதற்கு  2 முதல் 3 வேலைநாட்கள் ஆகும். இயற்கை எரிவாயு சேவைகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள்: நாட்டில்  இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) சேவைகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிஎன்ஜி நிலையங்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வகுத்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின்படி, ஏலம் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்கள், 8 முதல் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும், 8181 சிஎன்ஜி நிலையங்களை அமைக்கும். இதன் விலைகள் சந்தை நிலவரப்படி தீர்மானிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க முயற்சி: தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சுரங்க பகுதிகளில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 50 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வாகன எரிபொருளில், இயற்கை எரிவாயுவின் பங்கு அதிகரிக்க உதவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மோடி அரசு கவுரவம் ஜம்மு & காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பெயர்.

மோடி அரசு அதிரடி தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் 4,923 பேர் கைது.

பிரதமர் மோடி அரசு தலைமையிலானா மத்திய அரசு ஆட்சி பொறுப்பிலேறிய பின்பு நாட்டிற்கு எதிராக செயல்படும் குற்றவாளிகளை ஒடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளது. மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை அளித்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றங்கள் குறித்தத் தரவுகளைத் தொகுக்கும் தேசிய குற்ற ஆவண அலுவலகம், ‘கிரைம் இன் இந்தியா’ எனும் அதன் வருடாந்திர வெளியீட்டில் அத்தகவல்களை வழங்குகிறது. ...

ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் என்னென்ன ?

ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் என்னென்ன ?

ஓபிசி பிரிவினருக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து மக்களவையில்  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு.ஏ.நாராயணசாமி, சுஷ்ரி பிரதிமா பூமிக் ஆகியோர் எழுத்துபூர்வமாக இன்று பதில் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:  மத்திய அரசின் நேரடி வேலைவாயப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சமூக நீதியை உறுதி செய்ய, ஓபிசி மாணவர்களுக்கு மெட்ரிக் வகுப்புகுகளுக்கு முன்னும், பின்னும் கல்வி உதவித் தொகைகள், வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக் கடனில் வட்டி மானியம் அளிக்கும் டாக்டர் அம்பேத்கர் திட்டம், தேசிய அளவிலான ஆராய்ச்சி உதவித் தொகை, மாணவ, மாணவிகளுக்கு விடுதிகள் கட்டித் தருதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் உதவி, தொழில் தொடங்க மூலதன நிதி, குறைந்த வட்டியுடன் கூடிய கடனுதவி திட்டங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மத்திய வேலை வாய்ப்பு மற்றம் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு போன்ற திட்டங்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகின்றன. போதை மறுவாழ்வு மையங்களில் ஆய்வு: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இ-அனுதான் இணையதளம் (https://grants-msje.gov.in) தகவல்படி, 2019-20-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் உள்ள 65 ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களில், மாநில அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களின் பரிந்துரைப்படி அந்த அமைப்புகளுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நிதிவழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியர்களுக்கான ஒதுக்கீடு: தற்போதுள்ள பட்டியலினத்தனர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத ஒதுக்கீடு உத்தராகண்ட், குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மிசோரம், தில்லி, ஜம்மு காஷ்மீர், கோவா, அசாம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதன் விவரம் கிடைக்கவில்லை. மத்திய அரசின் 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கண்காணித்து, காலியிடங்களை நிரப்பி வருகிறது. அவற்றின் விவரம் இணைப்பில் -1-இல் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சை எடுக்கும் குழந்தைகள்: இந்தியப் பதிவாளர் இணையளத்தில் உள்ள தகவல் அடிப்படையில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிவில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 29,237-ஆக உள்ளது.  பிச்சை எடுப்பவர்களுக்கான திட்டங்கள்: நலிவடைந்த தனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கு உதவ, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ‘ஸ்மைல்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் பிச்சை எடுப்பவர்களின் மறுவாழ்வக்கான துணைத் திட்டமும் உள்ளது.  இதில் பிச்சை எடுக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, மருத்துவ வசதி அளிப்பது, ஆலோசனை வழங்குவது, கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. பிச்சை எடுப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு நிதி மற்றும் மேம்பாட்டு கார்பரேஷனுக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1.50 கோடியை வழங்கியுள்ளது. பிச்சை எடுத்து வந்த 514 பேருக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.182 கோடி ஒதுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு:  மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுபவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதக் கழிவுகளை அகற்றுபவர்கள் இன்னமும் இருப்பதாக சில தன்னார்வ அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கான ஆதாரங்களை நிருபிக்க முடியவில்லை.  கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 309 பேர் கடந்த 5 ஆண்டுகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கைகளால் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மாநிலம் வாரியாக இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. மதுரையில் கைகளால் கழிவுகளை அகற்றும் இரு துப்புரவு தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது,  2013-ஆம் ஆண்டுக்கு முன், கைகளால் கழிவுகளை அகற்றிய  துப்புரவுத் தொழிலாளர்களின்  விவரம்: 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாக கைகளால் கழிவுகளை அற்றிய தொழிலாளர்கள் மாநில வாரியாக இணைப்பு-1-இல் கொடுக்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், நிதியுதவி அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இதில் இடம் பெற்றள்ளது. மராத்தா பிரவினருக்கான இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ரத்து செய்தது. அரசியல் சாசன திருத்தப் பிரிவுகளை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்க அதிகாரம் இல்லை என கூறியது. இந்த பட்டியலைப் பராமரிக்கும் மாநிலங்களுக்கான அதிகாரத்தைத் திரும்ப பெற, அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கலைஞர் செய்தி சுட்ட வடை! பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்களின் முகத்தில் கரி பூசிய தங்கமகன் நீரஜ் சோப்ரா!

கலைஞர் செய்தி சுட்ட வடை! பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்களின் முகத்தில் கரி பூசிய தங்கமகன் நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு மிகப்பெரிய கவுரவத்தையம் நிம்மதியை வழங்கினார் நாடே நீரஜ் ...

பாகிஸ்தானுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிக்கல்! அடுத்த தாலிபான்களின் நகரம் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிக்கல்! அடுத்த தாலிபான்களின் நகரம் பாகிஸ்தான்!

நாட்டை கத்தி முனையில் பிடித்து வைத்து கந்துவட்டி கறந்து அந்நாட்டை தன் அங்கீகரிக்கபடாத மாநிலமாக ஆக்கிவைத்திருக்கின்றது சீனா, இது அரசுகளுக்குள்ள ஒப்பந்தம்ஆனால் மக்களை இந்திய எதிர்ப்பு உள்ளிட்ட ...

திரும்ப வந்துட்டேனு சொல்லு! தினமலரில் மதன் ரவிச்சந்திரன்! தரமான சிறப்பான சம்பவம் செய்த தினமலர்!

திரும்ப வந்துட்டேனு சொல்லு! தினமலரில் மதன் ரவிச்சந்திரன்! தரமான சிறப்பான சம்பவம் செய்த தினமலர்!

மதன் ரவிச்சந்திரன் ஊடக நெறியாளர் இவரை தெரியாத ஊடகங்களும் இல்லை வலது இடதுசாரி பார்வையாளர்களும் இல்லை. நடுநிலையோடு பேசுவதினால் இவரை சங்கி என அழைக்க ஆரம்பித்தார்கள். பாண்டே ...

அவைத்தலைவர் ஆகிறாரா வேலுமணி! உள்ளாட்சியில் மண்ணை கவ்வும் பயத்தில் தி.மு.க! ரெய்டு பின்னணி இதுதானோ!

அவைத்தலைவர் ஆகிறாரா வேலுமணி! உள்ளாட்சியில் மண்ணை கவ்வும் பயத்தில் தி.மு.க! ரெய்டு பின்னணி இதுதானோ!

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைப்பற்றி பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதற்கு பதில் பலமான விமர்சனங்கள் ...

Page 243 of 461 1 242 243 244 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x