80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் இலவசமாக உணவு தானியங்கள்- மத்தியரசு
மத்திய அரசிற்கு நன்றி ! கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன் ...
மத்திய அரசிற்கு நன்றி ! கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன் ...
நாடு முழுவதும் உள்ள முன்னணி ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இது சவால்களை சந்திக்கும் நேரம் மட்டும் அல்ல குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்க வேண்டிய காலம் என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அரசு மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் இடையே நல்ல ஒருங்கிணைப்பை பராமரிக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களாக உற்பத்தியை அதிகரித்ததற்காக ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பிரதமர் பாராட்டினார். திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அவர் ஆமோதித்தார். நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள, தொழிற்சாலை ஆக்ஸிஜனை மாற்றிவிட்டதற்காக ஆக்ஸிஜன் தொழில்துறையினருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலைமையை மேம்படுத்த, வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் அதேபோல் ஆக்ஸிஜன் போக்குவரத்துக்கான வசதியையும் மேம்படுத்த வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு, இதர கேஸ் டேங்கர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் ஆக்ஸிஜன் தொழில்துறையினரை வலியுறுத்தினார். மாநிலங்களின் ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு, காலி ஆக்ஸிஜன் டேங்கர்களை உற்பத்தி மையங்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ரயில்வே மற்றும் விமானப்படையை திறம்பட பயன்படுத்துவது பற்றி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறினார். மத்திய அரசு, மாநிலங்கள், ஆக்ஸிஜன் தொழில் துறையினர், போக்குவரத்து உரிமையாளர்கள், மருத்துவமனைகள் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சிறந்த கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தான், இந்த சவாலை எளிதில் எதிர்கொள்ள முடியும். ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களை பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களுக்கு அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். விரைவில் இந்த நெருக்கடியை நாடு வெற்றிகரமாக முறியடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைமை நிர்வாக இயக்குனர் திரு முகேஷ் அம்பானி, செயில் தலைவர் திருமதி சோமா மண்டல், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் திரு சாஜன் ஜிந்தால், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் திரு நரேந்திரன், ஜேஎஸ்பிஎல் நிறுவனத்தின் திரு நவீன் ஜிந்தால், ஏஎம்என்எஸ் நிறுவனத்தின் திரு திலீப் ஓமன், லிண்டே நிறுவனத்தின் திரு எம் பானர்ஜி, ஐனாக்ஸ் நிறுவனத்தின் திரு சித்தார்த் ஜெயின், ஜாம்ஷெட்பூர் ஏர் வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு நொரியோ சிபுயா நேஷனல் ஆக்ஸிஜன் லிமிடெட் நிறுவனத்தின் திரு ராஜேஷ் குமார் சரப், அகில இந்திய தொழிற்சாலை வாயுக்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் திரு சாகெட் திகு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
சி.எஸ்.ஐ ஆலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு தொகை ரூ.25 கோடியை மோசடி செய்ததாக பிஷப் திமோத்தி ரவீந்தர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு ...
கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, சோலார் பேனல் அமைத்துத்தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்தவர், சரிதா நாயர். கேரளாவில் ...
தடுப்பூசி போட்டுக் கொள்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகத்து கொண்டிருகிறது என்பதே நிம்மதியான விசயம்தான்… தடுப்பூசி போட்டு கொள்வதை தள்ளிப்போடுவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல்தான் ...
உண்மையில் இந்தியா முதல் அலை கொரோனாவில் மாபெரும் வெற்றி அடைந்தது, தடுப்பு மருந்தும் கண்டறிந்து அசத்தியது பின் ஊடகங்களின் பொய்களை நம்பி போராளிகளின் பதாகைகளை நம்பி கொரோனா ...
கோவை தெற்குத் தொகுதியில் பாஜக தாமரை சின்னத்தில் வானதி சீனிவாசனுக்கு எதிராக களம் கண்ட கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் இந்த பெருந்தொற்று சமயத்தில் காணவில்லை.போன தேர்தலில் ...
தோனியின் சூட்சமம் என்னை வியக்க வைத்தது தோனிக்கு கம்பீர் புகழாரம். ஐபிஎல் 2021, போட்டிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதிலும் சென்னை அணி பழைய சென்னை அணியாக ...
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உயிரிழப்பும் சற்று அதிமாகி வருகிறது. ...
ஒரு நாளைக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக அரசுக்கு வழங்க தயார்."ஸ்டெர்லைட் நிறுவனம்" இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால், கொரோனா ...
