பல்வேறு முயற்சிகள் மூலம் கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்கு பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (BSCL), நகர நிர்வாகத்துக்கு ஆதரிக்கிறது. தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) மற்றும் தொழில்நுட்பம் மூலம் வழிகாட்டுதலும், விழிப்புணர்வைப் பரப்புதலும், கொவிட்டுக்கு எதிராக நகரின் போருக்கு BSCL அளிக்கும் ஆதரவின் முக்கிய அம்சமாகும். "எனது பாகல்பூர்" என்னும் செயலியை அறிமுகப்படுத்துவதற்கு தனது ஆதரவை அளித்த BSCL, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரே இடத்தில் முக்கிய தகவல்களை அளிப்பதற்கும், இந்தப் பெருந்தொற்று சமயத்தில் மக்களை ஈடுபடுத்தி அவர்களின் உணர்வுகளை நேர்மறையாக வைத்திருப்பதற்கும் அதை உபயோகப்படுத்தியது. மக்களைச் சென்றடைந்து, சரியான தகவல்கள் பரப்பப்படுவதை உறுதி செய்ய, வானொலி மற்றும் பண்பலை அலைவரிசைகளின் சக்தியை BSCL சிறப்பாகப் பயன்படுத்தியது. "லாக்டவுன் கே பன்னே" என்பது பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் அதன் திறன்வாய்ந்த தலைமையால் எடுக்கப்பட்ட மற்றுமொரு தகவல், கல்வி மற்றும் தொடர்பு முயற்சியாகும். பொது முடக்கக் காலத்தின் பல்வேறு அனுபவங்களைச் சார்ந்த ஒரு புதிய கதையை பகிர "லாக்டவுன் கே பன்னே" என்னும் கோஷத்துடன் கதை சொல்லும் தொடர் ஒன்றை BSCL தொடங்கியது. நல்லதொரு செய்தியுடன் கூடிய ஒவ்வொரு கதையும், மக்களை அவர்களின் உணர்ச்சிகளை நேர்மறையாக வைத்திருக்கவும், ஒளிந்திருக்கும் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வரவும், குடும்பத்துக்காக இல்லத்தரசிகள் செய்த தியாகங்களை பாராட்டவும், இயற்கையுடன் அவர்களை இணைக்க ஊக்குவிக்கவும், குடும்பத்துடனான உறவை மேம்படுத்தவும் மற்றும் உயர்ந்த இந்தியக் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளவும் உதவியது.