ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் பஹல்காம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரியாஸ் அகமது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் அனந்த்நாக் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 5 போலீசாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பஹல்காம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பீர் குல்சார் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட உத்தரவில், இடமாற்றம் செய்யப்பட்ட அனைவரும் அனந்த்நாக் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர். இதில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் பெயர், பழைய பணியிடம் மற்றும் புதிய பதவிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம், பாதுகாப்பு சூழ்நிலையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இது போலீசின் பாதுகாப்பு அமைப்பின் செயல்திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதையடுத்து, காவல் துறை மிக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள்:
இன்ஸ்பெக்டர் அப்துல் ரஷீத் – ஐஷ்முகாம் போலீஸ் நிலைய
இன்ஸ்பெக்டர் நிசார் அகமது – ஸ்ரிகுஃப்வாரா
இன்ஸ்பெக்டர் பீர் அகமது – பஹல்காம்
இன்ஸ்பெக்டர் ரியாஸ் அகமது – அனந்த்நாக் மாவட்ட போலீஸ் லைனில் மாற்றம்
இன்ஸ்பெக்டர் சலீந்தர் சிங் – அனந்த்நாக் மாவட்ட போலீஸ் லைனில் மாற்றம்
இன்ஸ்பெக்டர் பர்வேஸ் அகமது – கொகர்நாக்
இதற்கிடையில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக பிடிபட்டவர் போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி தப்பி ஓடிய போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு படை வீரர் ஒருவர் எடுத்த அந்த வீடியோவில், பாறைகள் நிறைந்த அந்த ஆற்றில், பிடிபட்ட நபர் திடீரென குதித்து தப்ப முயல்வது, நீச்சல் அடித்து வெளியெற முடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் கொடுத்து உணவு வழங்கிய நபரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்
நீச்சல் அடிக்க முடியாமல்
அவரது பெயர் இம்தியாஸ் அகமது என்பதும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஸ்லீப்பர் செல் ஆக அவர் செயல்பட்டு இருக்கலாம் என்று பாதுகபபு படையினர் சந்தேகித்தனர். அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை காட்டுவதாக கூறிய அகமது, பாதுகாப்பு படையினரிடம் எஸ்கேப் ஆக முயற்சித்து நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “கடந்த 23 ஆம் தேதி இம்தியாசின் பங்களிப்பு விசாரணையில் கண்டறியப்பட்டது. லஷ்கர் பயங்கரவாதிகளின் மறைவிடம் குறித்து தனக்கு தெரியும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். மறைவிடத்தை காட்டுவதாக அவர் அழைத்து சென்றார். அந்த நேரத்தில் திடீரென வைஷோவ் ஆற்றில் குதித்து நீந்தி தப்ப முயன்றார். ஆனால், ஆற்று நீரின் வேகத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார்” என்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர் ஒருவர் எடுத்த அந்த வீடியோவில், பாறைகள் நிறைந்த அந்த ஆற்றில், இம்தியாஸ் அகமது திடீரென குதித்து தப்ப முயல்வது, நீச்சல் அடித்து வெளியெற முடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்படும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















