நடப்பு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை தொடரினை தொகுத்து வழங்க அனைத்து நாட்டிலிருந்தும் கிரிக்கெட் தொகுப்பாளர்கள் இந்தியா வந்துள்ளார்கள். அதே போல் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து உலக கோப்பை தொடருக்காக இந்தியா வந்த தொலைக்காட்சி ஜைனப் அப்பாஸ் பாகிஸ்தானுக்கே அனுப்பிவிட்டார்கள். த
உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இந்த தொடரை குறித்து செய்தி சேகரிக்க பல்வேறு நாட்டில் இருந்து பத்திரிக்கையாளர்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திலும் பாகிஸ்தான் போட்டிகளை சைனாப் அபாஸ் தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் சைனாப் அபாஸ் அதில் சைனாப் அபாஸ் இந்தியா வருவதற்கு முன்னர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்து மதத்திற்கு எதிராககவும் இந்தியாவிற்கு எதிராகவும் பல கருத்துக்களை கூறி வந்துள்ளார். இதற்கு பல இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சைனாப் அப்பாஸ் மீது வழக்குத் தொடுக்க போவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சைனாப் அபாஸ் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலக்கப்பட்டு இந்தியாவிலிருந்து மீண்டும் பாகிஸ்தானுக்கே அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் உலகக்கோப்பை தொடரில் எவ்வித சம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்பு காரணங்களால் சைனாப் அபாஸ் இந்தியாவிலிருந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
இதே போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் பத்திரிகையாளர்களுக்கு இன்னும் இந்தியாவுக்கு வர விசா கிடைக்க பெறாத நிலையில் அவர்களுடைய கேள்விகளை வாட்ஸ் அப்பில் மூலம் அனுப்பி அதற்கு பதில் வழங்க பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















