கொரோன ஊரடங்கு தளர்வுகள் இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. தமிழகத்தினை பொறுத்தவரையில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கியது. வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்டுகிறது.
வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டு சோதனை செய்து உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதி சீட்டு பெற்றிருக்கிறதா என்பதை விசாரித்த பிறகே கர்நாடக மாநிலங்களில் அனுமதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் கொடியுடன் பெங்களுரில் சுற்றிய தமிழ்நாட்டு Registration உடைய வாகனம் சுற்றி திரிந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கர்நாடக காவல்துறை அந்த வாகனத்தினை மறித்து நிறுத்தியுள்ளார்கள்.
பின்பு அவர்களை விசாரணை செய்த போது தமிழகத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது மேலும் உடனே காரில் கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அவிழ்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பின் பெங்களுர் டிராபிக் காவல்துறை இந்திய கொடியை கொடுத்து காரில் கட்டிய சம்பவம் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது. தமிழகத்தினை சேர்ந்த வாகனம் இவ்வளவு தூரம் எப்படி பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி கொண்டிருந்தது, தமிழக காவல்துறையினர் இதை கண்டு கொள்ளவில்லையா என்ற விசாரணை மேற்கொண்டுள்ளர்கள்.
கர்நாடக காவல்துறை செய்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வந்தே மாதரம்!