ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி என்ற பிரிவினைவாத அமைப்பை துவங்கியவர் சையத் அலி ஷா கிலானி 92. சமீபத்தில் இவர் காலமானார்.
காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்குவதே தன் வாழ்நாள் இலட்சியம் என்று ஹூரியத் மாநா ட்டு அமைப்பை உருவாக்கி இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்த பிரிவினைவாதி செய்யது அலிஷா கிலானி காலமானார்.
இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கியதும் ஹூரியத் அமைப்பில் இருந்த பலர் இனி காஷ்மீர் தனி நாடு கனவு அவ்வளவுதான் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று விட்டனர்.
ஒரு காலத்தில் இந்தியாவையே மிரட்டி வந்த ஹூரியத் அமைப்பு பாஜக ஆட்சியில் கலகலத்து போய்விட்டது, கூட்டம் இல்லாத வெறும் கூடாரத்தில் நின்று கொண்டு இந்தியாவை எப்படி திட்டுவது என்று யோசித்து ஹூரியத் அமைப்பில்இருந்து விலகி வீட்டிலேயே முடங்கிய கிலானி வயது மூப்பால் காலமானார்.
அவரது இறுதி ஊர்வலத்தின்போது பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என்பதால், காவல் உத்தரவுப்படி கிலானியின் உடல் உடனடியாக நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கிலானியின் உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது ; கிலானியின் உடலை உடனடியாக நல்லடக்கம் செய்ய வேண்டும் என நாங்கள் கூறியதற்கு, அவர்களது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்கிருந்தவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். கிலானி உடலில் போர்த்தப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை நாங்கள் தான் அகற்றினோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
blob:https://www.geo.tv/9f6aac93-57f4-404c-b78b-0032b471e15d