ஆகஸ்ட் ஆரம்பத்தில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் ( Organisation of Islamic Conference OIC), “காஷ்மீரில் 370 நீக்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு சவுதி ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த கூட்டமைப்பை சவுதி இல்லாமல் கூட்டி நிறைவேற்றுவோம்” என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி கொக்கரித்ததால் கடுப்பான சவுதி
பாகிஸ்தானுக்கு கொடுத்து வந்த கடனை நிறுத்தியது. கொடுத்த கடனை திருப்பிக் கேட்டது. பாகிஸ்தானுக்கு மலிவு விலையில் கொடுத்து வந்த எண்ணெய் (பெட்ரோல், டீசல்) ஒப்பந்தங்களை ரத்து செய்தது. சொந்த விமானம் இல்லாமல் இருக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கு இலவசமாக தந்த விமான சலுகைகளை ரத்து செய்தது. நிலைமை மோசமானதால், அதை சரி செய்ய பாகிஸ்தான் இராணுவ தலைவன் பாஜ்வா இரு தினங்களுக்கு முன் சவுதி சென்றார் . பழைய மரியாதை இல்லை. ஒரு சிலரை மட்டுமே சந்திக்க முடிந்தது பாஜ்வாவால். எல்லாவற்றுக்கும் மேலாக, இளவரசர் முகமது பின் சல்மான் இவரை சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார்.
இனி சவுதி கதவுகள் பாகிஸ்தானுக்கு திறக்கப்படுமா என்றால் சந்தேகமே. பாகிஸ்தான் உபயோகிக்கும் F16 போர் விமானங்கள் சவுதியால் வாங்கி கொடுக்கப்பட்டவை. அவற்றின் மெயிண்டனன்ஸும் சவுதியில் (ரியாத் / ஜெத்தா) செய்யப்படுகின்றன. அவற்றையும் சவுதி பிடுங்க வாய்ப்பு. அப்படி திரும்ப பெற்று விட்டால், பாகிஸ்தானின் விமானப்படை மூடப்படும்.Beggars can’t be choosers என்பதை மறந்து, இவ்வளவு நாளும் படியளந்த சவுதியை நிறையவே நிந்தித்து விட்டார்கள் பாகிஸ்தானின் இம்ரான் கானும், குரேஷியும்.மலேஷியா சென்ற இம்ரான், “இனி சவுதியை நம்பி பலனில்லை” என்ற ரீதியில் பேசியதும், துருக்கியுடன் சேர்ந்து, சவுதியை தாக்கி பேசியதும் சவுதிக்கு ஏற்புடையதாக இருக்க வாய்ப்பில்லை.
எண்ணெய் விலை விழுந்ததிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் அடக்கி வாசிக்கின்றன – குறிப்பாக சவுதி. முன் போல பயங்கரவாதிகளுக்கு பணம் தருவதில்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி அமைதிமார்க்க நாடுகளின் தலைவராக முயற்சித்தார்கள் மஹாத்தீர் முஹமதுவும் துருக்கியின் எர்டோகனும்.காஷ்மீருக்கு ஆதரவாக பேசி இப்போது மஹாத்தீர் அவரது சொந்தக் கட்சியிலிருந்தே தூக்கி வீசப்பட்டார்.
ஐசிஸ் பயங்கரவாதி எர்டோகன் சவுதி விட்ட இடத்தை பிடிக்க முயற்சி. அதுவும் தோற்கும்.
2019இல், ஐ.நா கூட்டத்தில் பேச இம்ரானுக்கு விமானத்தை கொடுத்து உதவினார் முகமது பின் சல்மான். ஐ.நா கூட்டத்தில், ‘அணு ஆயுத தாக்குதல் நடக்கும்’ என்று இம்ரான் மிரட்டி பேசினார். அமெரிக்காவிலிருந்து மீண்டும் சவுதி கிளம்பியது இம்ரான் விமானம். இம்ரான் பேசிய விவரம் தெரிந்ததும், விமானம் பாதியிலேயே மீண்டும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது, இம்ரான் இறக்கி விடப்பட்டார். அங்கிருந்து இம்ரான் commercial flight பிடித்து (டிக்கெட் எடுத்து) ஜெத்தா வந்து சவுதி இளவரசரை சமாதானம் பண்ணியுள்ளார்