நமது நாட்டின் தலைப்பகுதியின் கிரீடமாக உள்ள யூனியன் பிரேதேசம் ஜம்மு காஷ்மீர்,370 சிறப்பு சட்டத்தை நீக்கிய பிறகு வளைச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி மக்கள் தற்போது நாங்கள் இந்தியாவுடன் இணைய விருப்புகிறோம் என கருத்துக்கள் தெரிவித்துள்ளார்கள்
நமது நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் காஷ்மீர் பிரச்சினையாகத் திகழ்ந்து வந்தது.இந்த மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் அல்லது தனி நாடாக்க வேண்டும் என்று பிரிவினைவாத தீவிரவாத அமைப்புகள் போராடி வருகின்றன.
பிரிவினைவாதக் கொள்கை கொண்ட 26 அரசியல் கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் ஒன்றிணைத்து கடந்த 1993-ஆம் ஆண்டு ஹுரியத் மாநாட்டு அமைப்பை உருவாக்கினர்.பிரிவினைவாதத்தை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தி வருகிறது.
இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள ஜம்மு-காஷ்மீரை பிரித்தே ஆக வேண்டும் என்ற கொள்கையுடன் பிரிவினைவாதிகள் செயல்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது கில்கிட்-பால்டிஸ்தான். 1947-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, இந்தப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இணைத்துக் கொண்டது. சுமார் 72,971 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில், 20 லட்சம் பேர் வசிப்பதாக 2013-ஆம் ஆண்டு மக்கள் தொகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 மாவட்டங்கள், 33 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதிதான், இந்தியாவுடன் இணைய தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்தை, இந்தியா வந்திருந்த கில்கிட்-பால்டிஸ்தான் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் செங்கே ஹஸ்னன் சேரிங் தெரிவித்துள்ளார். கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி இந்தியாவுடன் இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மும்பையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தான் அரசு, தனது காலனி ஆதிக்கப் பகுதியாகக் கருதுகிறது; அங்கு உயர்கல்வி கற்பதற்கான எந்த வசதிகளும் இல்லை; அடிப்படை உரிமைகள் குறித்து சட்டரீதியாக யாரேனும் கேள்வி எழுப்பினால்கூட, தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ அங்கு வசிக்கும் மக்கள் சுதந்திரமாக வாழ நினைப்பதாகவும், அதன் காரணமாக இந்தியாவுடன் இணையவே அவர்கள் விரும்புவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கூடும் அதற்கான மசோதா சிறப்பு நாடாளுமன்ற கூட்ட தொடரில் முன்வைக்கப்படும் என தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. மேலும் புதிய நாடாளுமன்றத்தில் அகண்ட பாரத ஓவியம் வரையபட்டுள்ளது.
மேலும் பிரிந்து போன பாகிஸ்தான் இன்றைக்கு பாரதத்தை பாராட்டுகிறது. பலுஸிஸ்தான் மாகாணம் பாரதத்துடன் இணைய வேண்டி போராட்டம் நடத்துகிறது.ஆப்கன் மக்களும் பாரதமே உயர்வென்கிறார்கள். மியன்மரும், நேபாளமும் பாரதம் வழிகாட்ட காத்திருக்க, இலங்கையும் பாரதத்தை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையை இன்றைக்கு நேரிடையாகக் கண்டுகொண்டிருக்கிறோம்.
இதனிடையே அகண்ட பாரதம் என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. ஒருவேளை பாரதம் என பெயர் மாற்றும் தருணத்தில் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பல பகுதிகள் இந்தியாவுடன் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.