பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்‍கிச்சூடு ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் துப்பாக்‍கிச்சூடு நடத்தியது.

இதற்கு இந்திய படையினர் தக்‍க பதிலடி கொடுத்தனர்.  எல்லை கிராமப் பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.  இதன் காரணமாக பூஞ்ச் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

ராணுவ உயரதிகாரி கூறியதாவது:-
கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பூஞ்ச் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் ஷாபூா் மற்றும் கொ்னி ஆகிய எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம்நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


இதற்கு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.இருந்தபோதிலும் பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து நடத்திய தாக்குதலில் கிராமவாசி ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் காயமடைந்தனா். அவா்கள் தீவிரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இவ்வாறு அவர் கூறினார்.


Exit mobile version