பாகிஸ்தான் உதவியுடன் பஞ்ச்ஷீரை கைப்பற்றியது தாலிபான். பஞ்ச்ஷீர் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அமருல்லா சாலே உள்ளிட்ட சிலர் தஜிகிஸ்தான் தப்பியிருக்கலாம் என்கிறார்கள்.தரைவழியாக ஜெயிக்க முடியாத தாலிபான், சாட்டிலைட் உதவி கொண்டு டுரோன்களைக் கொண்டு தாலிபான்கள் தாக்கியதிலிருந்து.
அந்த உதவி அமெரிக்கா / ஐரோப்பாவிடமிருந்து கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். (தாலிபான்களுக்கு அவ்வளவு மூளை கிடையாது). தரைவழி தாக்குதல் தொடர்ந்திருந்தால் இன்னும் பல நாட்கள் / மாதங்கள் சண்டை நடந்திருக்க வாய்ப்பு. அமருல்லா சாலே ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றாலும், அவரை ஆதரிக்காமல், தாலிபான்களை ஆதரிக்கிறது அமெரிக்கா & கூட்டம். “ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் தான் ஆள வேண்டும்” என்று அமெரிக்கா / ஐரோப்பா முடிவு பண்ணியிருக்காவிட்டால், தாலிபான்களை கண்டித்திருப்பார்கள். அப்படி ஏதும் செய்யவில்லை.
ஐ.நாவும் காபூல் சென்று தாலிபான்களுடன் பேசிவருகிறது.இதற்கிடையில், “பஞ்ச்ஷீர் மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும்” என்று பலரும் குரல் கொடுக்கிறார்கள். ஏற்கனவே இடியாப்ப சிக்கலில் இருக்கிறது ஆஃப்கானிஸ்தான். அதில் இந்தியா தலையிடாதது நல்ல முடிவே. ஆஃப்கானிஸ்தானில் 60% பேர் ஹசாரா, உஸ்பெக், தஜிக் – ஷியா – மக்கள். சன்னி தாலிபான்கள் பெரும்பாலும் பஷ்டூன் இனம். பஷ்டூன்களை பொறுத்தவரை, ஆஃப்கானிஸ்தான் அவர்களுக்கு மட்டுமே சொந்தம். மற்ற ஷியா ஹசாரா, உஸ்பெக், தஜிக் இனங்கள் தாலிபான்களை பொறுத்தவரை காஃபீர்கள் – கொல்லப்பட வேண்டியவர்கள்.
அதன் படி கொன்று குவிக்கிறார்கள்.பஷ்டூன் தாலிபான்களுக்குள் ஏகப்பட்ட தலைவர்கள் & குழுக்கள். அவர்களும் பதவிக்கு அடித்துக் கொள்கிறார்கள். இதில் புரோக்கர் வேலை பார்த்து பிழைக்கும் பன்றிஸ்தானும் ஏதாவது கிடைக்காதா என்று நாக்கை தொங்கப்போட்டு சுற்றிக் கொண்டிருக்கிறது.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தலீபான்களுடன் சண்டையிட்டு வந்தநிலையில், பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தலைநகரை சுற்றியுள்ள மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாகவும் மாகாண தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாக தலீபான்கள் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் பஞ்ச்ஷீர் மாகாணத்தை விட்டு வெளியேறினால் தலீபான்களுடம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எதிர்ப்புக்குழுவின் தலைவர் அகமது மசூத் தெரிவித்திருந்தார்.
அவர்கள் அடித்துக் கொண்டு முடிவுக்கு வரட்டும். ஜனநாயக முறையில் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்குப்படும் வரை, இந்தியா அதிலிருந்து விலகியிருப்பது சரியான முடிவே.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















