ஒரு சம்பந்தமும் இல்லை ஆனால் கம்பியில்லா மின்சாரம் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த அவர் இந்த பிரபஞ்சத்தில் காலப்பயணம் மேற்கொள்ளும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார் அதாவது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் போன்ற காலங்களுக்கு பயணிப்பது குறித்து ஆராய்ச்சி செய்ததாக குறிப்புகள் சொல்கின்றன அப்படிபட்ட ஆராய்ச்சியாளர் ஒரு குறிப்பை இந்த உலகத்துக்கு கொடுத்து விட்டு சென்றுள்ளார் அது என்னவென்றால் 3,6,9, ஆகிய இந்த மூன்று எண்களின் இரகசியத்தை அறிந்து கொண்டால் இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த ரகசியத்தையும் அறிந்து கொள்ளலாம் என்று தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார் .
இந்த 3,6,9 என்ற எண்களை அடிப்படையாக கொண்டு மேற்கு உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்றளவும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது
அப்படியே இந்த 3,6,9 எண்களை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வாங்க இந்த பழனி மலையில்தான் அந்த இரகசியம் அடங்கி இருக்கிறது
நம்முடைய இந்து வழிபாட்டு முறைகளில் 3,6,9 என்ற எண்ணிக்கை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அது பழனி மலையில் தெளிவாக நிரூபிக்க பட்டுள்ளது
அதாவது 3 கோணம் கொண்ட முக்கோண பழனி மலை மீது (பழனி என்ற 3 எழுத்தையும் கவனிக்க)
6 முக கடவுளான முருகன் சிலை
9 வகையான பாஷாணங்களாகிய நவபாஷாணத்தில் செய்யப்பட்டுள்ளது மேலும் போகர் என்ற 3 எழுத்து கொண்ட சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
மேலும் போகர் ஏன் பழனி மலையை தேர்ந்தெடுத்தார் என்றால் செவ்வாய் கிரகத்தின் கதிர்வீச்சு பழனி மலையில் இறங்குவதாக குறிப்புகள் உள்ளது
செவ்வாய் என்பவர்
9 ஆம் எண்ணுக்கு அதிபதி ஆகும் எனவே பழனி மலையில் 3,6,9, என்ற எண்ணின் ஆதிக்கம் நிறைந்துள்ளதாகவே கருதுகிறேன் இது எதிர்பாரமல் நடந்த விசயமாக கருதவில்லை எனவே இந்த இரகசியத்தை சொல்ல முற்பட்டேன் அன்பர்களே நன்றி