முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பழனி முருகன் கோவிலுக்குள் மாற்று மதத்தினர் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. திடீரென அந்த அறிவிப்பு பலகையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் அகற்றியது. இந்த நிலையில் மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 படி இந்து அல்லாத சமயத்தினர் கோயிலில் நுழைவதை தடுக்கின்றது. எனவே இந்து அல்லாதவர்கள் கோயிலுக்கு நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க கோரி செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஸ்ரீமதி விசாரித்து வந்தார். இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று வழங்கப்பட்டுளது. நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பில் இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு பதாகையை கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்”.
மேலும், இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மதக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் கோயிலில் தரிசனம் செய்ய விரும்பினால், கோயிலில் இதற்காக பதிவேடு வைக்க வேண்டும். அதில் ‘இந்த சுவாமி மீது நம்பிக்கை வைத்து தரிசனம் செய்ய வருகிறேன்’ என உத்தரவாதம் கொடுத்த பிறகு கோயிலுக்கு அனுமதிக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















