மூலபத்திரம் என்றால் திமுகவிற்கு மூலம் வந்துவிடும் என்பதே உண்மை. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டது என முதலில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பிக்க அதை தொடர்ந்து பா.ஜ.க வின் தடா பெரியசாமி, டாக்டர் ஸ்ரீநிவாசன் ஆகியோரின் புகாரை எஸ்.சி. எஸ்.டி ஆணையத்திடம் புகார் அளிக்க அந்த புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணையில் இறங்கியது எஸ்.சி. எஸ்.டி ஆணையம்.
இதனை தொடர்ந்து ஏதிமுக-தலைவர் ஸ்டாலினுக்கு முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பு வந்தது.பின்பு மாற்று பிரமுகராக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பியது மேலும் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இருக்கிறோம் என பல்டி அடித்தார் முக ஸ்டாலின் ஆனால் இன்னும் முரசொலி மூல பத்திர விஷயம் கிடப்பில் தான் இருக்கிறதே தவிர மூடவில்லை. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மூல பத்திர விவகாரம் சூடு பிடிக்கும்.
இந்த நிலையில் மதுரையில், தி.மு.க., நிர்வாகி மோசடி செய்துள்ள, பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கவும், போராட்டம் நடத்தவும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் தலித் அமைப்பினர் முடிவு செய்து உள்ளனர்.
மதுரை, பைபாஸ் சாலையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பஞ்சமி நிலத்தை, தி.மு.க. நிர்வாகி மோசடி செய்துள்ள விவகாரம், தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. பஞ்சமி நில மோசடி புகாரில், தி.மு.க. மாணவரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிக்கிய தி.மு.க., நிர்வாகி, சென்னையில் மேலிட ஆசியுடன், ‘மினரல் வாட்டர்’ நிறுவனம் நடத்தி வருகிறார். எனவே, அவர் மீது கட்சி ரீதியாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், அவரது நிறுவனத்தில் தான், குடிநீர் பாட்டில்கள் வாங்க வேண்டும் என, தி.மு.க.,வினருக்கு, கட்சி மேலிடம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில், மதுரை பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி, தென் மாவட்டங்களைச் சேர்ந்த, தலித் அமைப்பினர் மற்றும் பா.ஜ.,வினர் இணைந்து போராட்டம் நடத்தவும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் அளிக்கவும் முடிவு செய்து உள்ளனர்.
நன்றி : தினமலர்