உலகை புரட்டி போட்டு வரும் கொரோனாவுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உலக நாடுகள் அதன் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது . ரஷ்யா இஸ்ரேல் போன்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்கப்பபட்டதாக அறிவித்திருந்தாலும், அவை பாரிசோதனை முறையிலேயே உள்ளன. கொரோனாவுக்கு இதுவரை உலகம் முழுவதும் 100 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ட்ராஸெனகா, பயோடெக் , ஜாண்சன் அண்டு ஜாண்சன் , மெர்க் , மாடெர்னா, சனோஃபி சீனாவின் கான்சைனா பயோலாஜி நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவின் ஆயுர்வேதிக் நிறுவனமான பதஞ்சலி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஹரித்துவாரில் கூறுகையில், ” கொரோனா வைரஸ் பரவியதையடுத்து எங்கள் நிறுவனம் சார்பில் தனி விஞ்ஞானிகள் குழுவை அமைத்து கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தோம்.
கொரோனாவின் மூலக்கூறு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, உடலில் மென்மேலும் பரவாமல் தடுக்க கூடிய மருந்தை கண்டுபிடித்தோம். இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் 100 பேருக்கு கொடுத்து சோதித்து பார்த்தோம். அனைவருமே கொரோனாவில் இருந்து மீண்டு விட்டனர். அனைவரும் 5 முதல் 14 நாள்களுக்குள் குணமடைந்தனர்.இதன் மூலம் ஆயுர்வேதம் மூலம் கொரோனாவை குணப்படுத்தி விடலாம். இன்னும் ஒருவாரத்தில் அதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம் என அறிவித்துள்ளார்.
இது போன்ற அறிவிப்புகள் தான் மக்களிடையே கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தமிழகத்திலும் ஆயுர்வேதா சித்தா மூலம் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கபசுப குடிநீர், ஆயுர்வேத மாத்திரை ஆர்செனிக் ஆல்பம் 30 போன்றவை அரசு அங்கீகரித்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















