நாடளுமன்ற கூட்ட தொடர் நடந்து வரும் சூழலில் எதாவது பிரச்சனையை கிளப்பிவிட்டு நாடளுமன்றத்தினை முடக்குவது எதிர்கட்சிகளுக்கு வாடிக்கையான ஒன்று . இந்த மழை கூட்ட தொடரில் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள் உட்பட உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், மீண்டும் பெகாசஸ் பற்றிய விவாதமும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ஒட்டு கேட்டதற்கு தகுந்த ஆதாரங்களை இன்னமும் வெளியிடாமல் வெறும் வாய் பேச்சால் நாடாளுமன்றத்தினை முடக்கி வருகிறார்கள் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகள்
பெகாசஸ் உளவு நடக்கவில்லை’ உண்மைகளை உடைக்கும் சிங்கப்பூர் நிபுணர் – கோலாகல ஸ்ரீநிவாஸ்
“இந்திய நாடு தோண்டத் தோண்ட குறையாத தங்கச் சுரங்கம். அதைக் கைப்பற்ற பன்னாட்டு சக்திகள் துடிக்கின்றன” – பெகாசஸ் பற்றி கோலாஹலாஸ் ஶ்ரீநிவாஸ் & சிங்கப்பூர் சைபர் நிபுணர் செந்தில்குமார் உரையாடலிலிருந்து ஒரு பகுதி
கேள்வி: மத்திய அரசுக்கு பெகசஸ் தேவையில்லை, பயன்படுத்தியிருக்காது என எப்படிக் கூறுகிறீர்கள்? பிரனாப் முகர்ஜியை ப.சிதம்பரம் ஒட்டுக் கேட்டதும் உண்டு…
பதில் 1: பிரனாப் முகர்ஜி மட்டுமல்லாமல் பாராளுமன்றம் முழுக்க ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. கேபினட்டில் என்ன பேசுகிறார்கள் என்பதை நேரடியாக (லைவ்) வெளிநாடுகள் ஒட்டுக் கேட்ட காலம் ஒன்று உண்டு. 2014இல் ஆட்சி மாறியதும், கிட்ட்த்தட்ட 3 மாதங்கள் பாராளுமன்ற கட்டிடங்களை இந்த கருவிகளை நீக்கி ‘சுத்தம்’ (Sanitize) செய்தார்கள்.
பதில் 2: ஏன் இந்தியா பெகசஸை உபயோகித்திருக்காது என்ற கேள்விக்கு பதில்…. தொழில் நுட்பத்தை பொறுத்தவரையில் நாம் (பெகசஸை விட) முன்னேறியிருக்கிறோம். அது தவிர, தொலைபேசியை ஒட்டுக் கேட்காமல், அந்த இடத்துக்கும் போகாமல், 100 மீட்டர் – 500 மீட்டர் தொலைவிலிருந்து ஒட்டுக் கேட்கும் கருவிகள் நம்மிடம் உள்ளன. அவர்கள் பேசும் அலை அதிர்வை (Frequency) பெற்று அதை ஒலியாக (Audio) மாற்ற முடியும்.
பதில் 3: அது மட்டுமல்லாமல், voice modulation observe technology என ஒன்றும் இந்தியாவிடம் உள்ளது. அதை உபயோகித்து, ஒருவருடைய குரல் மாதிரியை (வாய்ஸ் சாம்பிள்) கொண்டு, அவர் உலகின் எந்த பகுதியில் தொலை பேசியில் பேசினாலும், அவர் குரலை மாதிரியுடன் (Voice Sample) ஒப்பிட்டு, அவர் தான் பேசுகிறார் என்று கண்டறிய முடியும்.
பதில் 4: அரசு தாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பதிலிருந்து தப்பிக்க பிறரது பெயரில் சிம் கார்டுகள் வாங்கி சிலர் பேசிவருகிறார்கள். அவர்களும் இந்த தொழில்நுட்பத்தில் பிடிபடுகிறார்கள். அது அவர்களுக்கு தெரிவதில்லை.
பதில் 5: எனவே, பெகசஸ் வாங்கித்தான் இந்தியா ஒட்டுக் கேட்கவேண்டும் என்ற தேவையில்லை. பெகசஸை விட சிறந்த தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ தயாரித்து தந்துள்ளது. அதையே இந்தியா உபயோகிக்கிறது.
கேள்வி: பெகசஸை விட சிறந்த தொழில்நுட்பம் நம்மிடையே இருப்பதால் இந்தியா பெகசஸ் பெற தேவையில்லை என்பதை உறுதி செய்துள்ளீர்கள். வேவுபார்க்கும் இம்மாதிரி மென்பொருட்கள் (SpyWare) தேவை தானா?
பதில் 6: அதை நல்லவற்றுக்கும் பயன்படுத்தலாம், கெட்டதற்கும் பயன்படுத்தலாம். மேலும், பெகசஸை உருவாக்கும் என்.எஸ்.ஓ நிறுவனம், இந்தியா தன்னிடமிருந்து பெகசஸ் மென்பொருளை பெறவில்லை என்று உறுதி செய்துள்ளது (இந்தியாவும் தன்னிடம் பெகசஸ் கிடையாது என்பதை தெரிவித்துள்ளது). “சிலர் சுயலாபத்துக்காக வேண்டுமென்றே இந்தியாவை இதற்குள் புகுத்தியிருக்கிறார்கள்” என என்.எஸ்.ஓ நிறுவனமும் கூறியுள்ளது.
பதில் 7: பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். தேவையில்லாத செயலிகளை (apps) உங்கள் கைபேசியிலிருந்து நீக்கிவிடுங்கள். வங்கி பரிவர்த்தனை ஆப்களையும் தேவைப்படும்போது தரவிறக்கம் செய்து உபயோகித்து விட்டு உடனே நீக்கி (delete) விடுங்கள்.
பதில் 8: இந்திய நாடு தோண்டத் தோண்ட குறையாத தங்கச் சுரங்கம். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை வணிக நோக்கோடு மட்டுமே பார்க்கின்றன. இந்தியாவில் மூன்று விஷயங்கள் – எண்ணெய் சார்ந்த வர்த்தகம் (Oil), மருந்து (Pharma), ஆயுதம் (Defence) – தன்னிறைவடைந்து வருகின்றன. இதை பன்னாட்டு சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன. அவர்களுக்கு “ஆதரவான அரசை” இந்தியாவில் செயல்படுத்த துடிக்கின்றன. அதற்காக ஊடகங்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு வேண்டிய பொருளுதவி செய்து நாட்டுக்கு எதிராக தூண்டிவிட்டு வருகிறார்கள். எனவே, நாம் பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாய், வெளிநாட்டு சக்திகளுக்கு பகடைக் காய் ஆகிவிடாமல், எந்த தீய சக்திகளோடும் சேராமல், இந்தியக் குடிமகன் என்ற கடமையை ஆற்ற வேண்டும்.
‘பெகாசஸ் உளவு நடக்கவில்லை’ – உண்மைகளை உடைக்கும் சிங்கப்பூர் நிபுணர் – கோலாகல ஸ்ரீநிவாஸ் – kolahalas
https://youtu.be/W2QTB4WsUy
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















