தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. தினமும் 35 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். தினமும் 400க்கும் மேற்பட்டோர் பலி ஆகின்றார்கள். இதனை தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாளை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அனைத்து கட்சி எம்.எல்ஏ.,க்கள் அடங்கிய குழுவினருடன் தமிழக அரசு நேற்று ஆலோசனை மேற்கொண்டது.
பின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை மே 24 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்வித தளர்வுகளும் இன்றி அமல்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு மே 24 காலை முதல் நடைமுறைக்கு வரும். தளர்வுகள் இல்லாத ஊரடங்கு திடீரென அறிவித்துள்ளதால் மக்கள் குழம்பி போயுள்ளார்கள். மளிகை பொருட்கள் காய்கனிகள் வாங்குவதற்கு இன்று 9 மணி வரை கடைகள் செயல்படும் என அறிவித்தது அரசு.
முழ ஊரடங்கு என்ற அறிவித்த காரணத்தினால் சிறு காய்கறி வியாபாரிகள் மற்றும் பழக்கடைகள் குறிப்பிட்ட அளவில் பொருட்களை வாங்கி விற்றனர். திடீரென மாலை கடைகள் திறப்பு ஞாயறு அன்று கடைகள் முழவதும் திறந்து வணிகம் செய்யலாம் என்று அரசு அறிவித்தது. இதை அறிவித்த அரசு ஒன்றை யோசிக்க மறந்து விட்டது.
ஒருவாரத்திற்கான பொருட்கள் கடைகாரர்களிடம் இருக்குமா என்று. ஆனால் மக்கள் கடைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்த விட்டனர் வியாபாரிகள் எப்படியோ சமாளித்தனர் முடியவில்லை. காலையில் ஒரு கிலோ 20ரூபாய் விற்ற பொருள் மாலை 100 வரைத் தொட்டது பழங்களின் விலையும் தாறுமாறாக விற்கத் தொடங்கி விட்டது. திட்டமிடாமல் செய்த அறிவிப்பே இதற்கு காரணம். என்று மக்கள் புலம்பி வருகின்றார்கள்.
மக்கள் கூட்டமாக கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து மளிகை பொருள்களையும் அதிக விலைக்கு விற்பதால் ஏழை எளிய மக்கள் தங்கள் கொண்டு வந்த பணத்திற்கு இரு அல்லது மூன்று நாட்களுக்கு தேவையான பொருள்களையே வாங்கி செல்கின்றார்கள். ஆனால் ஊரடங்கு ஒரு வாரம்.