கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் தமிழக அரசு மீதும், அமைச்சர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் மு.க.ஸ்டாலினை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “இந்த கூட்டம் கண்டனம் கூட்டம் போல தெரியவில்லை. கழகத்தின் வெற்றி மாநாடாக காட்சி அளிக்கிறது.கருணாநிதி கடன்பட்ட நேரத்தில் புரட்சித்தலைவர் படத்தில் நடித்து உதவி செய்தார்.திருவாரூரிலிருந்து ஒன்றுமில்லாமல் வந்த கருணாநிதி குடும்பத்திற்கு இன்று இத்தனை சொத்துக்கள் எப்படி வந்தது.
ஊழல் கட்சி என்றால் தி.மு.க. தான். ஊழல் நாயகன் என்றால் அது ஸ்டாலின் தான்.
எந்த தைரியத்தில் அரசையும், அமைச்சர் குறித்தும் தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
தொண்டாமுத்தூரில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே ஸ்டாலினுக்கு வேலை இல்லை.
கிராம சபை கூட்டத்தின்போது கேள்வி கேட்ட பெண்ணை விரட்டியடித்ததால் ஸ்டாலினுக்கு ஏழரை சனி ஆரம்பித்து விட்டது.
ஆகவே தான் தெரியாமல் தொண்டாமுத்தூரில் வந்து பேசி மாட்டிக்கொண்டார்.
திருநள்ளாறு சென்று ஸ்டாலின் சாமி கும்பிடுவதே நல்லது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விடமாட்டோம் என்று ஸ்டாலின் பேசியதால் தமிழக மக்கள் திமுகவை இனி எப்போதும் ஆட்சியில் அமர விட மாட்டார்கள்!” என்றார் அதிரடியாக!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















