சினிமாக்காரன், டிவி பிரபலம் இன்னும் அரசியல் ஆசாமிகளுக்கே பத்மவிருது கிடைத்த தமிழகத்தில் முதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு அந்த விருது கிடைத்திருப்பது மோடி ஆட்சியின் மிகசிறந்த விஷயம்அந்த மூதாட்டியின் பெயர் பாப்பாம்மாள், மேட்டுபாளையத்தை சேர் ந்தவர், வாழ்வில் அவர் அளவு வறுமையினை கண்டவர் யாருமில்லை இதை தந்தது மோடி அரசு. முன்பெல்லாம் பத்மவிருதுகளில் அரசியலும் பணமும் விளையாடியது இன்னும் அதையெல்லாம் உடைத்து எளிய மக்களுக்கும் சாதனையாளர்களுக்கும் விருதை கொடுத்து கவுரவிகின்றது மோடி அரசு
இந்த நிலையில் அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளித்து பெரிதும் பிரபலம் அடையாதவர்களை மக்களின் பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
இதுதொடர்பான தனது சுட்டுரைச் செய்தியில், “அடிமட்ட அளவில் தன்னிகரற்ற பணியில் ஈடுபடும் ஏராளமான திறமைவாய்ந்த மக்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டதோ அல்லது கண்டதோ இல்லை. இதுபோன்ற எழுச்சியூட்டும் மக்களை நீங்கள் அறிவீர்களா? மக்களின் பத்ம விருதுக்கு (#PeoplesPadma) அவர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம். செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும். padmaawards.gov.in”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.