பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் நெற்றியை தினம் பாஜக முன்னாள் பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து சட்டமன்ற அலுவலகத்திற்கு சென்று மக்களின் புகார்களை பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கான மாற்று குடியிருப்பில் கட்டப்பட்ட சலவை தொட்டியின் அளவு பெரிதாக்கவும் குடியிருப்பில் மதில் சுவர் எழுப்பவும் என்ற கோரிக்கையை எழுந்தது. அந்த பகுதிக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். 85 வார்டில் மக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை பெற்று கொண்டார். அதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன் பெற்ற பயனாளர்களை சந்தித்தார்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி 1: ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் மறைவுக்கு பல கட்சி தலைவர்கள் வருத்தம் தெரிவினத்துளார்கள் பாஜகவோ மத்திய அரசோ கண்டனமோ வருத்தமோ தெரிவிக்கவில்லை
வானதி சீனிவாசன் பதில் : இந்திய தேசத்திற்காக வெளிநாடுகளில் பணியில் இருப்பவர்கள் இறந்தால் அவர்களுக்கு மத்திய அரசு மரியாதை செலுத்திவருகிறது. தனிப்பட்ட முறையில் வெளிநாடுகள் பணிக்கு செல்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது, அதற்கு வருத்தம் அளிப்பது தலைவர்கள் மற்றும் கட்சிகளின் தனிப்பட்ட உரிமை.
கேள்வி 2 ; கொங்கு நாடு என முதலில் ட்விட் செய்தது நீங்கள் தான் உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன? கொங்கு நாடு பிரிப்பதற்கு ஆதரவா ?
பதில் : நான் பா.ஜ.க வின் பிரதிநிதி தான் கட்சியின் கருத்தை தான் நான் பிரதிபலிப்பேன்.தமிழ்நாட்டைக் தனியாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.கவிற்கு எங்களுக்கு இல்லை கொங்கு பகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சிகள் உள்ளிட்டவை இம்மக்களின் ஆண்டாண்டு கால கோரிக்கையாக உள்ளது. எங்கள் பகுதியின் வளர்ச்சியில் ஆளும் அரசு எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கிறதோ அதை அதை பொறுத்து தான் கொங்கு நாடு குறித்து பரீசிலனை வரலாம்.
கேள்வி 3 : பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சிப்பது விளம்பரத்திற்காக என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளது பற்றி,
பதில் : தி.மு.க பா.ஜ.கவையும் பிரதமரையும் விமர்ச்சிப்பது விளம்பரத்திக்காகவா என பதிலடி கொடுத்தார் வானதி சீனிவாசன் அவர்கள்
மேலும் மத்திய அரசு வழங்கும் இலவச தடுப்பூசிகளை சில அரசியல்வாதிகள் எடுத்து கொண்டு போய் தனியார் மருத்துவமனைக்கு கொடுப்பதாக தகவல் வருகிறது. அதற்கான ஆதாரத்தைக் திரட்டி வருகிறோம். இந்த விஷயத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். தகுந்த முறையில் வேகமாக தடுப்பூசிகளை மாநில அரசு செலுத்த வேண்டும் என்றும் அப்போது வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.