பெரியார், பெரியாறு – வித்தியாசம் தெரியாத முதல்வர் மு.க.ஸ்டாலின்..! திருவள்ளுவர் தினத்தில் தமிழுக்கு வந்த சோதனை..!

தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இப்பதாவது:-

திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.

இவ்வாறு அவர், குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் அவர் எடுத்திருந்த, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை தொடர்பான வீடியோவையும் இணைத்திருந்தார்.

குஜராத்தை தாய் மொழியாகக் கொண்ட, தமிழ் தெரியாத பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்ட தமிழில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எந்தப் பிழையும் இல்லை.

ஆனால் இதே திருவள்ளுவர் பிறந்த தினத்தில், தமிழினத் தலைவர் மு.கருணாநிதியின் மகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை தொடர்பான செய்தியில் பிழை உள்ளது.

இதுதொடர்பாக, தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வருமாறு:-

முல்லைப் ‘பெரியார்’ அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி, தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பை இணைத்து வெளியிடப்பட்டு இருந்தது.

பின்னர் தமிழக அரசின் மக்கள் செய்தி தொடர்பு துறை மூலமாக வெளியிடப்பட்ட போஸ்டரை இணைத்து வெளியிடப்பட்டு இருந்தது.

ஆக இன்று ஒரே டுவிட்டர் பக்கத்தில் 2 இடத்தில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது.

இந்த இரண்டு செய்திகளிலும் “முல்லைப் பெரியாறு” என்பதற்குப் பதிலாக “முல்லை பெரியார்“ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசின், இந்த செய்தி குறிப்பு, “செய்தி வெளியீடு எண் 108” 3 பக்கங்களைக் கொண்டது.

அந்து செய்தி குறிப்பின் தலைப்பில் கொட்டை எழுத்தில் “பெரியாறு” – க்கு பதிலாக “பெரியார்” என்றே எழுதப்பட்டுள்ளது.

இது ஏதோ கவன குறைவினால் ஏற்பட்ட பிழை என்று சொல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு.

ஏனெனில், தமிழில் பாண்டித்தியம் பெற்ற அதிகாரிகள்தான் இதனை எழுதுகிறார்கள். அதன் பின்னர், பல நிலைகளை கடந்து, எழுத்துப் பிழை, கருத்துப் பிழை எல்லாம் சரி செய்யப்பட்ட பிறகே, முதல்வரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.

எனவே இது தட்டச்சுப் பிழை என்றுகூறி தப்பிப்தற்கு இடமில்லை.

தட்டச்சுப் பிழை என்று சொல்வதாக இருந்தால், தமிழக அரசின் தலைமைப் பீடத்தில், செய்தி வெளியிடும் முக்கிய பொறுப்புகளில் தமிழ் தெரியாத கத்துக் குட்டிகள்தான் அமர்த்தப்பட்டுள்ளா? என்ற கேள்வி எழும்.

எனவே அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ஆனால் விஷமத்தனமாக, திட்டமிட்டு, “முல்லைப் பெரியாறு அணை” என்ற பெயரை “முல்லைப் பெரியார் அணை” என்று மாற்றுவதற்காக செய்த சதி என்று தெரிகிறது.

உண்மையிலேயே இந்தத் தவறு கவனக்குறைவால் நேர்ந்தது என்றால் உடனடியாக அதனை சரி செய்து இருப்பார்கள். ஆனால் இந்தத் தவறு சரி செய்யப்படவே உள்ளது. ஆகவே இது திட்டமிட்டு திணிக்கப்பட்டதுதான் என்று திட்டவட்டமாக நம்பலாம் என்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள்.

எது எப்படியோ தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினத்தன்று, தமிழுக்கு வந்த சோதனை, வேதனையான ஒன்று.

Exit mobile version