மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை டெல்லியில் கட்டப்பட்டு வருகின்றது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதாவது 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
கடந்த வாரம் சென்ட்ரல் விஸ்டா கட்டிடப் பணிகளை தீடிரென ஆய்வு செய்தார் பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி இரவு சென்றார். அங்கு கட்டிடப் பணிகளைக் கண்காணித்த பிரதமர் மோடி ஒரு மணி நேரம் வரை இருந்து அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்தார். கட்டிடம் கட்டும் இடத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளிடம் பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியைப் புகைப்படம் எடுக்க ஒருவர் தரையில் படுத்துக்கொண்டு கேமராவை உயர்த்தியது போன்ற மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அவர் இணைத்திருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
பீட்டர் அல்போன்ஸ் கீழ்த்தரமான செயலுக்கு பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்தது. மேலும் பல கட்சிகளின் தலைவர்கள் பொய்யான போட்டோவை பரப்பிய பீட்டர் அல்போன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தங்களது எதிர்ப்பினை தெரிவித்தார்கள்.
உத்திர பிரேதசத்தில் 144 தடை உத்தரவு பிறபிக்கபட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நிலை அம்மாநில அரசிற்கு உள்ளது. கலவரம் ஏற்படுத்தவும் விளம்பரத்திற்காகவும் சோனியாவின் மகள் சூழலில் உத்திர பிரேதேசத்திற்கு செல்ல முயன்றார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுக்கு உள்ளதால் சூழலின் தன்மையை கருதி பிரியங்கா காந்தி அனுமதிக்கபடவில்லை பின் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்பொழுது அவர் தனது அறையை சுத்தம் செய்வது போன்ற காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பிரியங்கா காந்தி சுத்தம் செய்யும் வீடியோவை எடுக்க ஒருவர் தரையில் படுத்துக்கொண்டு கேமராவை உயர்த்தியது போன்ற புகைப்படங்களை டுவிட்டரில் பதிவு செய்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை இது போன்று வெளியிடுவாரா? என சம்பவம் செய்து வருகிறார்கள்.
முற்பகல் செய்யின்
— வெற்றிவேல் வீரவேல் (@vetivelveeravel) October 4, 2021
பிற்பகல் விளையும்…@PeterAlphonse7 https://t.co/EDn4MlZwdf