இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் சென்னையில் தொடர் மழை இருக்கும் என அறிவித்திருந்தது
இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் நேற்று மதியம் முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை கால்வாய்கள் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை.
மேலும் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டி செல்கிறார்கள். கடந்த வாரம் சாலையில் உள்ள குழியால் நிலை தடுமாறி அருகே சென்ற அரசுப்பேருந்து மோதி உயிரிழந்தார்.முகமது யூனஸ் என்ற 32 வயதே ஆன மென்பொறியாளர் அரசு பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கி பரிதாப உயிரிழந்தார்,. இந்த காட்சிகள் அச்சாலையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.பலி சம்பவம் நடந்தும் கண்டுகொள்ளாத விடியல் அரசு தற்போது சென்னையை முழ்கடித்துள்ளது.





