சென்னிமலை முருகர் கோவிலில் பக்தர்கள் வருவதற்கு முன்பே சூரசம்ஹாரம் முடித்து விட்டனர் – அதனால் கோபம் கொண்ட பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளை வெளுத்து வாங்கிவிட்டார்கள் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
முருகனுக்கு உகந்த மாதம் மற்றும் விரதம் கந்த சஷ்டி விரதம்ஆகும். சஷ்டி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. சஷ்டியில் ஏற்பட்டதே சூரசம்ஹாரம். கடந்த 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது . சூரசம்ஹாரத்திற்கு முருகனின் கை வேலாயுதமே பெருமை சேர்த்தது. வேலினால் சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான்.
இந்த நிலையில் சென்னிமலை முருகன் கோவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலில் சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. ஏன் என்றால் . இந்த ஆலயத்தில் தான் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மேலும் சென்னி மலையை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சூரசம்ஹாரத்திற்கு விரதம் இருந்து காப்பு காட்டி சென்னிமலைகோவிலில் வழிபடுவார்கள்.
சென்னிமலை முருகர் கோவிலில் கடந்த 9 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றுள்ளது. ஆனால் அதனை முறையாக மக்களுக்கு தெரிவிக்காமலும் முறையற்ற முறையிலும் நடத்தப்பட்டுள்ளது. வருடம் தோறும் நடைபெறும் 6 மணிக்கு நடைபெறும் சூரசம்ஹாரம் மதியம் 2 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. நடை மூடி இருக்கும் நேரத்தில் நடைபெற்றுள்ளது.மேலும் பக்தர்கள் வருவதற்கு முன்பே சூரசம்ஹாரம் முடித்து விட்டனர்
இதனால் கோபம் கொண்ட பக்தர்கள், மக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளை கேள்விகேட்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நீங்கள் யார் நேரத்தை மாற்றுவதற்கு அப்படி மாற்றினாலும் அதை மக்களுக்கு தெரிவிக்கவில்லை ஏன் உண்டியல் பணத்தை எடுக்கவந்தால் அதை மட்டும் பாருங்கள் சம்பிரதாய முறைகளில் தலையீடாதீர்கள் என வெளுத்து வாங்க தொடங்கிவிட்டார்கள்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.