விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ; அவர் பேசியதாவது; ஜெய்பீம் படம் வன்னியர் குல சமுதாயத்தையும் பட்டியல் இனம் சமுதாயத்தையும் சண்டைகளை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என கூறினார். மேலும் . முதலவரின் கொளத்தூர் தொகுதி குளத்து ஊராக மாறியுள்ளது! இது தான் திமுக சாதனை.
சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரியிலும் மிக மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் என கூறினார்.ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்கிற சிங்க் சென்னையாக உள்ளது.
கருணாநிதி காலத்தில் கட்டபட்ட வள்ளுவர் கோட்டம் நீர் நிலையை முடி அதன் மீது கட்ட பட்டது. சட்டத்திற்க்கும் நியமங்களுக்கும் மரியாதை கிடையாது.சென்னையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.அவர்களுக்கு வீட்டிற்கு 5 ஆயிரம் வங்கி கணக்கு மூலம் கொடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள் கடலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
கோயம்புத்தூர் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர்,தப்பு செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் போக்சோ சட்டம் உள்ளது யாராக இருந்தாலும் பரவாயில்லை.பள்ளி தாளாளர் மீராஜக்சன் கைது செய்துள்ளார்கள் அதை வரவேற்கிறோம் தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிகிறார்கள்.அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது.காலண்டர் வைத்ததாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று எங்களுக்கு தெரியும்.
நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்து மக்கள் கோவிலுக்கு போவதை இழிவாக பேசியுள்ளார். நாகூர் தர்காவை பற்றி பேசி இருக்கலாம் வேளாங்கண்ணிக்கு போக வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் அவர்கள் சொல்லவில்லை.ஏனென்றால் அது அவர்கள் மதம். ஜெய்பீம் படம் வன்னியர் குல சமுதாயத்தையும் பட்டியல் சமுதாயத்தையும் சண்டைகளை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறேன் என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே தமிழகத்தில் நடக்கிறது. வேறு எதுவும் நடக்கவில்லை. அரசாங்கம் செயல்பட ஆரம்பிக்கவில்லை. மக்கள் பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















