கேரளாவை கொரோன மிரட்டி வருகிறது நாளுக்கு நாள் அங்கு தொற்று உள்ளவர்கள் அதிகரித்து வருவதாக கேரளாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது
கேரள முதல்வர் கூறுகையில் மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர்கள் சிலரின் “பொறுப்பற்ற நடத்தை” யின் காரணமாக தான் கேரளாவின் நிலைமை தீவிரமாக்குகிறது என்று முதல்வர் பினராயி குறிப்பிட்டுள்ளார்.
காசர்கோட்டில் ஐக்கிய அரபு எமிரேட்-ல் இருந்து திரும்பியவரின் பற்றி குறிப்பிட்ட முதல்வர் பினராயி விஜயன். வெள்ளிநாட்டுலிருந்து திரும்பியவரை தனிமையாக இருப்பதற்கு அறிறிவுறுத்தப்பட்டது, ஆனால் அவர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார், இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனிடையே தற்போது உள்ள நிலவரப்படி கேரளாவில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை வீடுகளில் 44,165-லிருந்து 44,390-ஆகவும், மருத்துவமனைகளிலும் 225-ஆகவும் அதிகரித்துள்ளது. “அதிகரித்து வரும் எண்ணிக்கை கவலையடைய செய்கிறது. நிலைமையின் தீவிரத்தை சிலர் இன்னும் உணரவில்லை என்று தெரிகிறது. அத்தகைய நபர்களை நாங்கள் கடுமையாக கையாள்வோம்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்!
மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த காசர்கோட்டில் பல கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்படும், கடைகள் ஓரளவு திறக்கப்படும், போக்குவரத்து தடை செய்யப்படும். “நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இது போன்ற தவறுகள் மாநிலத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும்,” என குறிப்பிட்டார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘ஜனதா ஊரடங்கு உத்தரவு’க்கும் பினராய் விஜயன் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார். “நாங்கள் இதை ஆதரிப்போம். மாநில போக்குவரத்து பேருந்துகள், கொச்சி மெட்ரோ மற்றும் பிற சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும். அவசர சேவைகள் மட்டுமே இருக்கும், ”என்று அவர் கூறினார், கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்திற்கான நேரம் இது என பினாரயி விஜயன் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















