திமுக நிர்வாகி மீது ஸ்டாலினிடம் அளித்த நில அபகரிப்பு புகார்…
நாகப்பட்டினம், வடக்கு பொய்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவருடைய 39.5 சென்ட் நிலத்தை, கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் அபகரித்துள்ளார். இதன் மதிப்பு 3 கோடி ரூபாய். இது குறித்து வசந்தி, பல்வேறு புகார்கள்
கொடுத்துள்ளார். ஆனாலும், அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நாகப்பட்டினம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், முறையிட்டால் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று எண்ணி, ஸ்டாலினிடம் வசந்தி புகார் கொடுத்தார்.
நாகை வந்த ஸ்டாலினிடம், எங்கள் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற மனுவை வசந்தி கையில் வைத்திருந்தார். ஸ்டாலினிடம் கொடுக்க வேண்டும் என்றால் உங்கள் மனுவை புகார் பெட்டியில் போடுங்கள், தலைவர் கூப்பிடுவார் என்று திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர். பெட்டியில் புகாரைப் போட்டுவிட்டு வசந்தி காத்திருந்தார். ஆனால் நிகழ்ச்சி முடியும் வரை புகாரை ஸ்டாலின் படிக்கவும் இல்லை. அது குறித்து கேட்கவும் இல்லை. இதனால் வசந்தி ஏமாற்றமடைந்தார்.
திமுக நிர்வாகி செய்த நில அபகரிப்பை கட்சி தலைவரிடம் சொன்னால், நல்லது நடக்கும் என நினைத்தேன் அதுவும் நடக்கவில்லை என்று வசந்தி வேதனை தெரிவித்தார். இது குறித்து வசந்தியின் மகன் சந்தோஷ், தாத்தாவின் நிலத்தை, தாமஸ் ஆல்வா எடிசன்
அபகரித்தது குறித்து பல முறை புகார் கொடுத்து, அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தாமஸ் ஆல்வா எடிசன் கட்சி தலைவரின் கூட்டம் நடந்தது. அவர்களிடம் எங்கள் குறையைச் சொன்னால் வழி கிடைக்கும் என்று எண்ணினோம்.
மனுக்களை எல்லாம் பெட்டியில் போட சொன்னார்கள். கூப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்தோம்…! பின்னர் நாங்கள் திரும்பி வந்து விட்டோம் என்றார்.
தற்போது வசந்தி கொடுத்த புகார் மனு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனாலும், திமுக தலைவர் ஸ்டாலின் அது தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தில்லுமுல்லு கட்சியின் தலைவரிடமேவா புகாரைக் கொண்டு கொடுப்பது… அவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.