அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் தொடர்ந்து குளறுபடி நடந்து வருகிறது. மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லாததால் மக்கள் தொடர்ந்து அவதிபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் உயிர் பலி சம்பவமும் நடைபெற்றது. அப்படி இருந்தும் இன்னும் மருத்துவமனைகளை சீரமைக்க திமுக அரசு முன் வரவில்லை. விளம்பரங்களில் கவனம் செலுத்தும் தி.மு.க மக்களின் அத்தியாவசிய தேவையான மருத்துவமனைகளை கண்டு கொள்ளவில்லை.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அரசு மருத்துவமனைகளின் அவல நிலையைஎடுத்து காட்டியது..
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெறும் இன்குபேட்டருக்கு கல் வைத்து முட்டுக் கொடுத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக முதல் சிகிச்சையான இன்குபெட்டரில் வைத்து சிகிச்சை பெறுவது வழக்கம்.
இந்த தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வரும் பச்சிளம் குழந்தை ஒன்று இன்குபேட்டரில் கல் வைத்து முட்டு கொடுத்து சிகிச்சை பெற்று வருவதை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும், குழந்தைகளின் தீவிர சிகிச்சையான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே, இதுபோல அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பச்சிளம் குழந்தையின் உயிரோடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விளையாடுகிறதா என கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல, அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெயர் அளவிற்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்தாலும் கூட, அங்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், பேருந்து வசதிகள், குடிநீர் வசதிகள் கழிவறை வசதிகள் அவசரத்திற்கு தொடர்பு கொள்ள முடியாத ஒரு அவல நிலையும் நீடித்து வருவதோடு, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது மருத்துவ கல்லூரி நிர்வாக திட்டமோ, பொதுமக்கள் சார்பிலும் அல்ல சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் பெரும் எழுந்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















