‘எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்துள்ளது. எனவே தயவுசெய்து மாலத்தீவு சுற்றுலாவின் ஒரு பகுதியாக இருங்கள்’ என்று இந்தியர்களிடம் மாலத்தீவு சுற்றுலா அமைச்சர் மன்றாடி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலே: சுற்றுலாவை நம்பியிருக்கும் நாடு. மாலத்தீவுக்கு செல்வோர் பெரும்பாலும் இந்தியர்களே. சீனாவிற்கு சொம்பு தூக்கியது மாலதீவு அரசு. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவின் ஒருபகுதியான லட்சத்தீவுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டார். அதன் பின் மாலத்தீவின் பொருளாதாரமே சின்னாபின்னமாகி உள்ளது; உடனே மாலத்தீவு மைச்சர்கள் 3 பேர் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்தனர். இது விரிசலை மேலும் அதிகப்படுத்தியதுடன், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். இதனால், சுற்றுலாவையே பெரிதும் நம்பியுள்ள அந்நாட்டு பொருளாதாரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், “எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்தே செயல்பட விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம். இந்திய வருகையாளர்களுக்கு எமது மக்களும் அரசாங்கமும் அன்பான வரவேற்பை வழங்குவார்கள். சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையில், மாலத்தீவுகளின் சுற்றுலாவில் இந்தியர்களை தயவு செய்து ஒரு பகுதியாக இருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவைச் சார்ந்துள்ளது” என்று இப்ராஹிம் பைசல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை அவதூறாக சித்தரித்தும், 3 மாலத்தீவு அமைச்சர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து சர்ச்சை வெடித்தது. அந்த அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட போதும், இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவு ஆட்சியாளர்களின் நிலைப்பாடு மாறாத நிலையில், கணிசமான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலா திட்டத்தை ரத்து செய்தனர். இதனால் இந்தாண்டு தொடக்கம் முதல் மாலத்தீவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 42 சதவீதம் குறைந்தது. கடந்த ஆண்டு, ஜனவரி முதல் மே வரை மாலத்தீவுக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 73,785 ஆக இருந்தது; இதுவே 2024-ல் 42,638 ஆக குறைந்தது.
மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் மார்ச் 4 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, மாலத்தீவு சுற்றுலாவின் ‘டாப் 10’ தேசங்களின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்திற்குச் சறுக்கிச் சென்றது. இதனால் சுற்றுலாவை பெரிதும் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் மாலத்தீவு பலமான அடிவாங்கியது. எனவே, இந்தியாவிடமும், இந்தியர்களிடம் சரணாகதியாகும் வகையில் மாலத்தீவு அமைச்சரின் வேண்டுகோள் தற்போது வெளியாகி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















