பிரதமரே பாராட்டி சென்றது எங்களுக்கு எனர்ஜி தருகிறது-அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

பாரத பிரதமரே பாராட்டி விட்டு சென்றது எங்களுக்கு எனர்ஜியாக இருக்கிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பா.ஜ.க. எங்களது தோழமை கட்சி என்பதால் நட்பு ரீதியாக முருகன் என்னை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி எங்களை பாராட்டி விட்டு சென்றது எங்களுக்கு எனர்ஜியாக இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பாரத பிரதமரை தற்போது தான் பார்க்கிறோம். நம்முடைய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், மொழியையும், இலக்கியங்களையும் பாராட்டக் கூடிய பிரதமரை தற்போது தான் பார்க்கிறோம்.

மக்கள் கோ பேக் என எதிர்க் கட்சிகளை சொல்ல போகிறார்கள். எளிமையான முதலமைச்சராக எடப்பாடியார் செயல்படுகிறார். அவர் கொடுத்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ெபற்றுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version